பெண் வேடமிட்டு 7 பேரை கொன்ற கொலையாளி : வெளியான அதிர்ச்சி தகவல்
அமெரிக்க துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட இளைஞன் அன்றைய தினம் பெண் வேடமிட்டு வந்துள்ளான் என்பது தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
சதந்திர தினத்தில் துப்பாக்கி சூடு
கடந்த திங்கள் கிழமை ஜூலை 4ஆம் தேதி அன்று அமெரிக்க சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட இந்த விழாவுக்கு கரும்புள்ளியாக அமைந்தது என்றால் அது சிகாகோ துப்பாக்கி சூடு சம்பவம் தான்.

பெண்வேடமிட்டு வந்த குற்றவாளி
சிகாகோ நகரில் சுதந்திர தின விழா நடைபெற்ற போது ஒரு இளைஞன், திடீரென தான் வைத்திருந்த துப்ப்பாக்கியால் அங்குள்ளவர்களை சுட்டுள்ளார். அதில் 7 பேர் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ள்ளது. இதில் பலர் காயமுற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அந்த நபரை திங்கள் மாலை அமெரிக்கா காவல்துறை கைது செய்துள்ளாது.
காஃபி ஷாப்பில் வேலைக்கு சேர்ந்தாரா ட்விட்டர் சிஇஓ ? : வைரலாகும் புகைப்படங்கள்
செய்வாய் அன்று அவன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அந்த நபர் அன்றைய தினம் பெண் வேடமிட்டு அங்கு வந்துள்ளான் என்பதும், ஏ.ஆர்-15 எனும் ரக துப்பாக்கி வைத்து தான் இந்த தாக்குதத்தலை நடத்தியுள்ளான் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.