பலமுறை கெஞ்சியும் காதலை ஏற்கவில்லை - சதீஷ் பரபரப்பு வாக்குமூலம்!
மாணவியை ரயிலில் தள்ளி கொலை செய்தது குறித்து இளைஞர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
மாணவி படுகொலை
சென்னை பரங்கிமலை ரயில்நிலையத்துக்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயில் முன்பு, கல்லூரி மாணவி சத்யாவை தள்ளி படுகொலை செய்துவிட்டு சதீஷ் என்ற இளைஞர் தப்பி ஓடினார்.
இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மகளை இழந்த சோகத்திலும், மன அழுத்தத்திலும் இருந்த தந்தை மாணிக்கம் மாரடைப்பால் உயிரிழந்ததார்.
பகீர் வாக்குமூலம்
இன்று அதிகாலை அவருக்கு நெஞ்சு வலி ஏற்படவே அவரை உறவினர்கள் மருத்துவமனை கொண்டு சென்றனர். அப்போது அவர் வழியிலேயே உயிரிழந்ததாக அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து, மாணவியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய சதீஷை போலீஸார் ஈசிஆர் பகுதியில் கைது செய்தனர்.
சதீஷைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் ஈசிஆர் பகுதியில் சுற்றித் திரிந்த அந்த நபரை போலீஸார் கைது செய்தனர். அதன்பின் விசாரணையில், பலமுறை கெஞ்சியும் காதலை ஏற்க மறுத்து உதாசினப்படுத்தியதால் சத்யாவை கொலை செய்தேன்.
அவரை கொன்றுவிட்டு, நானும் தற்கொலை செய்ய முற்பட்டேன். அதற்குள்ளாக மக்கள் என்னை பிடிக்க வந்துவிட்டனர் என சதீஷ் பரபரப்பு வாக்குமூலத்தை அளித்துள்ளார். மேலும், அவருக்கு வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.