இறப்புக்கு முன் ராணி எலிசபெத்தை கொல்ல சதி - வெளியான பரபரப்பு தகவல்!

Queen Elizabeth II England
By Sumathi May 27, 2023 07:54 AM GMT
Report

இங்கிலாந்து ராணி எலிசபெத்தை கொல்ல முயற்சி நடந்தது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

 ராணி எலிசபெத்

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்(96) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உயிரிழந்தார். இந்நிலையில், 1983ல் அவர் அமெரிக்க பயணம் மேற்கொண்டபோது அவரை கொல்லை முயற்சி நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இறப்புக்கு முன் ராணி எலிசபெத்தை கொல்ல சதி - வெளியான பரபரப்பு தகவல்! | Kill Queen Elizabeth Ii Us Visit

இதுகுறித்த ஆவணங்களை அமெரிக்க மத்திய புலனாய்வு பிரிவின் (எப்.பி.ஐ.) இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதில், 1983-ம் ஆண்டு மார்ச் மாதம் ராணி 2-ம் எலிசபெத் தனது கணவர் மன்னர் பிலிப்புடன் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டார்.

கொல்ல சதி

அதற்கு முன்பாக சான்பிரான்சிஸ்கோ போலீஸ் அதிகாரிகளுக்கு வந்த தொலைபேசி அழைப்பில் பேசிய நபர், வடக்கு அயர்லாந்தில் தனது மகள் ரப்பர் புல்லட்டால் கொல்லப்பட்டதாகவும் அதற்காக ராணி எலிசபெத் படகில் செல்லும் போது கோல்டன் கேட் பாலத்தில் இருந்து

இறப்புக்கு முன் ராணி எலிசபெத்தை கொல்ல சதி - வெளியான பரபரப்பு தகவல்! | Kill Queen Elizabeth Ii Us Visit

ஒரு பொருளை வீசி ராணிக்கு தீங்கு விளைவிக்க முயற்சிப்பேன் அல்லது யோசெமிட்டி தேசிய பூங்காவுக்கு அவர் வரும் போது கொல்ல முயற்சிப்பேன் என்று தெரிவித்தார். இதையடுத்து ராணி எலிசபெத் படகு அருகில் வரும் போது பாலத்தின் நடைபாதைகளை மூடுவதற்கு உளவுத்துறையால் உத்தேசிக்கப்பட்டது.

யோசெமிட்டி தேசிய பூங்காவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதா? அல்லது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்பது குறித்து சொல்லப்படவில்லை. மேலும் போலீஸ் அதிகாரி மற்றும் போலீசில் பேசிய நபரின் பெயர்கள் திருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.