'' வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் '' - தசாப்தங்கள் கடந்த ராணி எலிசபெத் பிலிப்பின் காதல் கதை !

Queen Elizabeth II England
By Irumporai 3 வாரங்கள் முன்

காதல் என்பது அன்பின் ஒரு வடிவம். அதுதான் மனிதனைப் பல்வேறு இடங்களுக்கு உயர்த்திச் செல்கிறது. அடுத்தவர் அந்தக் காதலை உணர்ந்து பாராட்டுகிறாரா, இல்லையா என்பதற்கு அப்பாற்பட்ட ஒருவித இதய உணர்வு தான் காதல் இந்த காதல் சில சமயம் சோகத்தை ஏற்படுத்தினாலும், காதல் ஒரு மேஜிக் ..

எலிசபெத் பிலிப் காதல்

ஆம் காதல் ஒரு butterfly போல வரும்வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும் வரை என ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் வரும் பாடல்களை போலத்தான் இங்கு பல காதல்கள் . 

இது சாதாரண மனிதர்களுக்கு மட்டும் அல்ல உலகே வியந்து பார்த்த ராணி எலிசபெத் மற்றும் இளவரசர் பிலிப்பின் காதல் கதையும் ஒரு கல் ஒரு கண்ணாடி போலத்தான் பல சாவால்களை கடக்க வேண்டியிருந்தது.

தற்போது இருவரும் உலகில் உயிருடன் இல்லை , ஆனால் இந்த தம்பதியின் காதல் பல தசாப்தங்களை கடந்தது என்பதுதான் நிதர்சனமான உண்மை. வாருங்கள் தெரிந்துகொள்வோம் மரபுகளை கடந்து இதயத்தால் இணைந்த இந்த அரச தம்பதியினரரின் காதல் கதையினை.

சிறு வயதில் இரு திருமணம் ஒன்றில் இருவரும் சந்தித்து இருந்தாலும் 1939ஆம் ஆண்டு டார்ட்மெளத் கடற்படை பயிற்சிக் கல்லூரியில், அவர்களின் வாழ்க்கை தொடங்கிய தருணம் புகைப்படம் ஒன்றின் மூலம் அவர்களின் முதல் சந்திப்பு நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

18 வயது படைப்பயிற்சி பெறுபவராகவந்த இளவரசர் ஃபிலிப், 13 வயதான இளவசரி எலிசபெத்தின் கண்களில் தென்பட்டார். கண்கள் ரெண்டும் ஜாலம் பேசியது ஆனால் இது டீன் ஏஜில் ஹார்மோன் செய்யும் ஜாலம் என முதலில் நம்பினாலும் சில வருடங்களில் நட்பாக மாறியதுஉலகபோர் சமயங்களில் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டனர்.

கடிதங்களை இணைத்த இதயம்

அதன்பின்னர் பிலிப் போர்சமயத்தில் பிசியாக இருந்தாலும் இரண்டாம் உலகப்போர் காலத்தில் இருவரும் கடிதம் மூலம் உரையாடத் தொடங்கியிருக்கின்றனர். அப்போது தான் இருவர் மனதிலும் காதல் பிறந்துள்ளது. பீரங்கிகள் , குண்டுகளுக்கு மத்தியில் இவர்களின் காதல் கடிதங்கள் எந்த ஆயுதமும் துளைக்கவில்லை இரண்டாம் உலகப் போரில் இருவரும் பங்குபெற்றனர்.

போர் இருவரையும் பிரித்து வைத்தாலும் மனதளவில் அவர்கள் இணைந்தே இருந்தனர். இளவரசர் ஃபிலிப் தனது விருப்பத்தை தெரியப்படுத்தினாலும், எலிசபெத்தின் 21ஆவது பிறந்தநாள் அதாவது 1947பிறகுதான் அவர்களின் நிச்சயதார்த்தம் குறித்த அறிவிப்பு பொதுவெளியில் வெளியானது.

கீரிஸ் இளவரசர் அலைஸின் கிரீடத்திலிருந்த கற்களை கொண்டு பிளாட்டினம் மற்றும் வைரத்தால் ஆன நிச்சாயதார்த்த மோதிரம் ஒன்றை உருவாக்க இளவரசர் ஃபிலிப் உதவினார். அதேபோல திருமணத்திற்கு முன் இரண்டாம் எலிசபெத்தின் தாய்க்கு இளவரசர் ஃபிலிப் கடிதம் ஒன்றை எழுதினார்.

தசாப்தங்கள் கடந்த காதல்

அதில் "தான் காதலில் எந்த தடையுமின்றி முழுவதுமாக விழுந்துவிட்டேன்" என தெரிவித்தார். வெஸ்ட்மின்ஸ்டர் அப்பேயில் 2,000 விருந்தினர்கள் முன்னிலையில் இந்த தம்பதி திருமணம் செய்து கொண்டனர். இரண்டாம் உலகப் போர் முடிந்து இரண்டே வருடங்கள்தான் ஆனது. நாடு அப்போது போரின் தாக்கத்திலிருந்து மீண்டு வந்த தருணம் அது.

எனவே இந்த திருமணம் ஒரு அரிதான கொண்டாட்டமாக நிகழ்ந்தது. "நமது கடினமான பாதையில் வண்ணங்களின் சாரல் இந்த திருமணம்" என சர்ச்சில் தெரிவித்திருந்தார். திருமணம் முடிந்து அடுத்த வருடம் அவர்களின் மூத்த மகன் சார்ல்ஸ் பிறந்தார்.

அதன்பிறகு மகள் ஏன் (Anne) பிறந்தார். மறுபுறம் இளவரசர் ஃபிலிப் கடற்படை அதிகாரியாக உயர் பதவிகளை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார். எனவே இந்த இளம் குடும்பம் மால்டாவில் வாழ்ந்து கொண்டிருந்தது. அது ஒரு சாதாரண வாழ்க்கை போலதான் இருந்தது.

வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்

அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட காணொளிகள் மூலம், அந்த இளம் ஜோடி, ஒருவரின் துணையில் மற்றொருவர் எந்த கவலையுமின்றி, ஒரு மிதமான வானிலையை ரசித்து கொண்டு அரண்மனை கடமைகளிலிருந்து தள்ளி இருந்தனர் ஆனால், 1952ஆம் ஆண்டு பிப்ரவரி 6 அரசர் ஆறாம் ஜார்ஜ் இறக்கும் வரைதான் நீடித்தது.

அப்போது எலிசபெத்திற்கு வெறும் 25 வயதுதான். இளவரசர் ஃபிலிப்பிற்கு 30 வயது. ஃபிலிப்புக்கு இளவரசி எப்போது வேண்டுமானாலும் அரசி ஆவார் என்று தெரியும் ஆனால் அத்தனை சீக்கிரம் அது நடக்கும் என இந்த ஜோடி எதிர்பார்க்கவில்லை.

கணவரை காட்டிலும் மனைவி ஒரு உயர்ந்த பதவியில் இருப்பது மிக அரிதான ஒன்று. அரசியைப் பொருத்தவரை ஒரு இளம் தாயாக இருந்தாலும், அவர் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புதான் அவருக்கு முதலில் தோன்றியது. பொறுப்புகள் மாறியதால் அவர்களின் உறவில் பிரச்னை வந்திருந்தாலும் அது கதவுகளுக்கு பின்னேதான்.

தனது மனைவிக்கு துணையாக இருக்கும் தனது பொறுப்பை கிரகித்து கொள்ள இளவரசர் ஃபிலிப்பிற்கு சிறிது காலம் தேவைப்பட்டது. நதியில் நீந்தும் மீனை போன்று எனது தாத்தா அவர் விரும்பியதை செய்து கொண்டிருந்தாலும், அவர் இல்லாமல் அரசிக்கு ஒரு வேளையும் ஓடாது  2012ஆம் ஆண்டு இளவரசர் ஹாரி தெரிவித்திருந்தார்.

அவர்கள் காதல் வெளியுலகில் பரவலாக பேசப்படவில்லை ஆனால் காலங்கள் கடந்தாலும் பல சர்சைகள் இந்த அரச குடும்பத்தில் வெடித்தாலும் வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதது என்ற பாடலின் வரிகளுக்கு ஏற்றார் போல் வாழ்ந்து சென்றுள்ளனர் ராணி எலிசபெத் மற்றும் இளவரசர் பிலிப் தம்பதியினர்.