பயங்கர விபத்தில் ஹாக்கி வீரர்கள் 16 பேர் பலி - குற்றவாளியை இந்தியாவுக்கு நாடு கடத்த முடிவு!
ஹாக்கி வீரர்கள் உயிரிழந்த விவகாரத்தில் குற்றவாளியை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
ஹாக்கி வீரர்கள் பலி
கனடா, திஷ்டெலி பகுதியில் கடந்த 2018ல் பேருந்து-லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஹாக்கி வீரர்கள் 16 பேர் உயிரிழந்தனர்.
மேலும், 13 பேர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து, இந்த விபத்தை ஏற்படுத்தியதாக லாரி டிரைவர் ஜஸ்கிரத் சிங் சித்து என்பவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
நாடு கடத்தல்
தொடர் விசாரணையில், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஜஸ்கிரத் கனடாவில் குடியுரிமை பெற்று வசித்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
அதில், ஜஸ்கிரத் குற்றவாளி என உறுதியானது.
தற்போது, அவரது குடியுரிமையை ரத்து செய்து இந்தியாவுக்கு நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.