சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - சாக்குபையில் கட்டி காட்டில் வீசிய கொடூரம்!

Sexual harassment Assam Child Abuse Crime
By Sumathi Oct 09, 2022 07:08 AM GMT
Report

சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து, பையில் கட்டி காட்டில் வீசிய கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

 பாலியல் வன்கொடுமை

அசாம், கச்சார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிறுமி. இவர் துர்கை அம்மன் சிலை கரைக்கும் பூஜைக்கு செல்லவாதக கூறி சென்றுள்ளார். நெடுநேரம் ஆகியும் சிறுமி வீடு திரும்பாததால் அடுத்த நாள் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - சாக்குபையில் கட்டி காட்டில் வீசிய கொடூரம்! | Kidnapping Raping And Attempting Kill A Minor Girl

அதே நாள் மதிய வேலையில் சிறுமி உடல் காயங்களுடன் துணி கிழிந்த நிலையில் வீடு திரும்பியுள்ளார். சிறுமி கொடுத்த தகவலின் படி காவல் நிலையத்தில் அளித்த புகாரில் காவலர்கள் 26 வயது நபரைக் கைது செய்துள்ளனர்.

அதிர்ச்சி சம்பவம்

அந்த நபர் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் கழுத்தை அறுத்துக் கொலை முயற்சி செய்துள்ளார் என்றும் பின்னர் சிறுமியை சாக்கு பையில் கட்டி காட்டுக்குள் தூக்கிப்போட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணையில்,

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - சாக்குபையில் கட்டி காட்டில் வீசிய கொடூரம்! | Kidnapping Raping And Attempting Kill A Minor Girl

அந்த நபர்,சிறுமி தன் காதலி என்றும் பூஜைக்கு வேறு நபருடன் சென்றதால் கோபத்தில் செய்ததாகக் கூறியுள்ளான். காட்டிக்குள் வீசப்பட்ட சிறுமி தானாகவே போராடி சாக்கு பையிலிருந்து வெளியில் வந்து வீடு திரும்பியுள்ளார்.

தற்போது சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிறுமியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.