ஓடும் ரயிலில் சிறுவன் செய்த மோசமான செயல் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
ஓடும் ரயிலில் சிறுவன் செய்த அதிர்ச்சி செயல் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
திருடிய சிறுவன்
ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயிலில் இருந்து சிறுவன் ஒருவன் செல்போனை பறித்துச் செல்லும் வீடியோ, ஒன்று இணையத்தில் பகிரப்பட்டது.
அதில், ரயில் நிலையத்தில் இருந்து ஒரு ரயில் புறப்பட்டு மெதுவாக சென்று கொண்டிருக்கிறது. அதன் அருகிலேயே நடைமேடையில் ஒரு சிறுவன் நடந்து செல்கிறான்.
அதிர்ச்சி வீடியோ
ரயிலின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியதும், ஜன்னலோரம் அமர்ந்திருந்த ஒருவரின் கையில் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடுகிறான். இந்தச் சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சத்னா ரயில் நிலையத்தில் நடந்துள்ளதாக பதிவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனைப் பார்த்த பலர் ரயில் நிலையங்களில் பாதுகாப்பை அதிகப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். ரயில் நிலையத்தில் ரயில்கள் நிற்கும்போது ஜன்னல் அருகே அமரும்போது செல்போன் பயன்படுத்த வேண்டாம்.
மேலும், எளிதில் எடுக்கும் வகையில் சார்ஜ் போட வேண்டாம் என்றும் காவல்துறையினர் அறிவுறுத்துகின்றனர். அதேபோல், பெண்கள் நகைகளை அணிந்து கொண்டு ஜன்னலோரம் அமர வேண்டாம் என்றும் எச்சரிக்கப்படுகின்றனர்.