சேரி மொழி சர்ச்சை; மன்னிப்பு கேட்க வலியுறுத்தும் காங்கிரஸ் - குஷ்பு விளக்கம்!

Tamil nadu Kushboo
By Sumathi Nov 23, 2023 09:15 AM GMT
Report

சேரி மொழி சர்ச்சை குறித்து குஷ்பு விளக்கமளித்துள்ளார்.

சேரி மொழி சர்ச்சை

மன்சூர் அலி கான் சர்ச்சைப் பேச்சு தொடர்பாக எக்ஸ் தளத்தில் ஒருவருக்கு பதிலளித்த குஷ்பூ, “திமுக குண்டர்கள் இப்படியான மோசமான மொழியைத் தான் பயன்படுத்துவார்கள். அவர்களுக்கு கற்பிக்கப்பட்டது இது தான்.

kushboo about cheri language issue

சாரி, என்னால் உங்களைப் போல சேரி மொழியில் பேச முடியாது எனக் குறிப்பிட்டிருந்தார். இதில் சேரி மொழி எனப் பயன்படுத்தலுக்கு பலர் கண்டங்கள் தெரிவித்தனர்.

ஆடை சுதந்திரம் இருக்கலாம், ஆனால் அதற்கும் ஒரு எல்லை உண்டு - குஷ்பூ பேட்டி!

ஆடை சுதந்திரம் இருக்கலாம், ஆனால் அதற்கும் ஒரு எல்லை உண்டு - குஷ்பூ பேட்டி!

குஷ்பு விளக்கம்

இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறை மாநிலத் தலைவர் எம்.பி. ரஞ்சன் குமார், சேரி மொழி என்று பேசி பட்டியலின மக்களை நேரடியாக குஷ்பூ அவமதித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியினருக்கே உரித்தான சாதிய மனோபாவத்தை விஷமாக கக்கியிருக்கிறார்.

மக்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பு எழுந்த பிறகும் கூட தன் தவறுக்கு மன்னிப்பு கேட்காமல். பூசி மொழுகும் வேலையை செய்ய தொடங்கியிருக்கிறார் என அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், நடிகை குஷ்பு இதுகுறித்து பகிர்ந்துள்ள பதிவில், சேரி என்றால் பிரஞ்சு மொழியின் அன்பு என்று அர்த்தம்.

என்னை விமர்சித்தவர்களை நான் அன்பால் பேச முடியாது என நகைச்சுவையாக கூறி இருந்தேன். இந்த கருத்தை ஒருசில தவறாக சித்தரித்து பறப்பி வருகின்றனர் என விளக்கமளித்துள்ளார்.