திமுக தொடர்ந்து குரைக்கிறது.. அறிவாலய பிச்சை அது - குஷ்பு சாடல்!
திமுகவினர் மீண்டும் குரைக்க தொடங்கிவிட்டதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
குஷ்பு
பாஜகவில் முக்கிய நிர்வாகியாக இருந்த நடிகை குஷ்புவுக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. தொடர்ந்து, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் திமுகவின் தலைமை கழக பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நடிகை குஷ்பு குறித்து மிகவும் இழிவாக விமர்சித்திருந்தார். அதற்கு பதிலளித்த குஷ்பு, இதுபோன்று பெண்களை இழிவாக பேநும் நபர்களை முட்டிக்கு முட்டி தட்ட வேண்டும் எனத் தெரிவித்தார்.
வைரல் பதிவு
ஆனாலும், தொடர்ந்து குஷ்புவை திமுகவினர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். தற்போது குஷ்பு பகிர்ந்த ட்வீட் ஒன்ரு கவனம் பெற்று வருகிறது. அதில், அறிவாலயத்தின் பிச்சையை உண்ணும் ட்ரோல் படைக்கு எதிராக ஒரு பெண்ணாக நான் உங்களை விட முன்னால் இருக்கிறேன்.
திமுக தொடர்ந்து குரைக்கிறது. நான் உங்களுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறேன் என்பதை அறிவதில் மகிழ்ச்சி. நன்றி. இந்த நாள் இனிய நாளாகட்டும் என பதிவிட்டுள்ளார்.