நடிகை குஷ்பு வீட்டில் தீடீர் மரணம் - இரங்கல் தெரிவிக்கும் ரசிகர்கள்
நடிகை குஷ்பு வீட்டில் ஏற்பட்டுள்ள திடீர் மரணத்தால் அவரது ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சினிமாவில் அறிமுகம்
தமிழ் சினிமாவில் 1980களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.
இதைத்தொடர்ந்து 1990களில் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார். பின்னர் கன்னடம்,மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வந்தார்.
பின்னர் பிரபல இயக்குநரும் நடிகருமான சுந்தர் சியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு அவந்திகா, அனந்திகா என இரண்டு மகள்கள் உள்ளனர்.
நடிகை குஷ்பூ தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார்.
குஷ்பு வீட்டில் திடீர் மரணம்
இந்த நிலையில் தற்போது திடீரென குஷ்பு வீட்டில் எதிர்பாராத வகையில் மரணம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், நீங்கள் கி்ட்டத்தட்ட12 வருடங்கள் எங்களில் ஒருவராக இருந்தீர்கள்.
நீங்கள் ஒரு கூச்ச சுபாவமுள்ள குழந்தையாக வந்தீர்கள், ஆனால் எங்கள் இதயத் துடிப்பாகிவிட்டீர்கள். உங்கள் புரிதல், நிபந்தனையற்ற அன்பு, உங்கள் புன்னகை, சில சமயங்களில் கோபம், பாதுகாக்கும் இயல்பு மற்றும் மிகவும் கீழ்ப்படிந்த இயல்பு ஆகியவை இதயத்தை உருகச் செய்தன.
நீங்கள் எங்களை மனவேதனைக்குள்ளாக்கி விட்டீர்கள். நீங்கள் இறுதியாக நிம்மதியாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
ஸ்னுாபியை நாங்கள் மிஸ் செய்வோம். உன்னை போல் யாரும் இருக்க முடியாது. லவ் யீ பட்டு, கடவுளே தயது செய்து அவரைக் கவனித்துக் கொள்ளுங்கள் என உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.
You were part of us for almost 12 long years. You came in as a shy little kid but became our heartthrob. Your understanding, unconditional love, your smile, tantrums at times, protective nature and the most obedient nature was heart melting. You have left us heartbroken. Hope you… pic.twitter.com/DJXUWEQL15
— KhushbuSundar (@khushsundar) April 27, 2023