குஷ்பு இட்லி பெயர் வர காரணம் இந்த பிரபல நடிகரா; யார் தெரியுமா? போடா என்ற குஷ்பு!

Prabhu Tamil Cinema Kushboo
By Sumathi Jun 29, 2024 09:30 AM GMT
Report

குஷ்பு இட்லி என்ற பெயர் எப்போது எதற்காக வந்தது தெரியுமா?

நடிகை குஷ்பு

தமிழ் சினிமாவின் 80 களில் டாப் நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. அழகு, நடிப்பு, அசத்தல் நடனத்தால் ரசிகர்களை கவர்ந்து கட்டிப்போட்டவர்.

kushboo with rajinikanth

எனக்கொரு மகன் பிறப்பான், இரட்டை ரோஜா, கோபாலா கோபாலா, சின்ன தம்பி, நாட்டாமை, அண்ணாமலை போன்ற பல வெற்றி படங்களில் நடித்தவர் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து கலக்கியவர்.

நடிகர் பிரபுவின் சின்ன வீடா கூட போக ரெடி - பிரபல நடிகை ஷாக் ஸ்டேட்மெண்ட்!

நடிகர் பிரபுவின் சின்ன வீடா கூட போக ரெடி - பிரபல நடிகை ஷாக் ஸ்டேட்மெண்ட்!

குஷ்பு இட்லி

குஷ்புக்கு தனி கோயிலே கட்டி கொண்டாடும் அளவிற்கு எக்கசக்கமான ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், குஷ்பு இட்லி என்ற பெயர்க்கு பின்னல் இருக்கும் கதை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

kushboo with prabhu

தலைவன் படப்பிடிப்பின் போது, லைட்மேன்கள் அனைவரும் வாடா போடா என்று பேசிக்கொண்டிருந்தார்களாம். அப்போது தமிழ் பேச தெரியாத குஷ்பு, இதனை கவனித்துவிட்டு அது மற்றவர்களுடன் பேசும் சாதாரண வார்த்தை என்று நினைத்துக்கொண்டு நடிகர் ரஜினியை ஒருமுறை வாடா என்று கூறியுள்ளார்.

அதை கேட்ட பிரபு அப்படியெல்லாம் சொல்லக்கூடாது என்று கூறி குஷ்புவின் கன்னத்தை கில்லி நல்லா இட்லி மாதிரி இருக்க என்று விளையாட்டாக தெரிவித்துள்ளார்.