அந்த படத்தை பார்க்காதீங்கனு என் மகள்கள் அப்படி எச்சரித்தாங்க - குஷ்பு பளீச்!
அனிமல் படம் பார்க்க வேண்டாம் என மகள்கள் எச்சரித்ததாக குஷ்பு தெரிவித்துள்ளார்.
நடிகை குஷ்பு
நடிகையும் பாஜக நிர்வாகியுமான வலம் வருபவர் குஷ்பு. சமீபத்திய கருத்தரங்கு ஒன்றில் பேசிய இவர், “அனிமல் திரைப்படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை.

இது ஒரு பெண் வெறுப்பு திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய அளவில் வசூல் செய்யும் படங்களில் ஒன்றாக மாறினால், அதை வெற்றிபெறச் செய்யும் மக்களின் மனநிலையைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். ‘அர்ஜுன் ரெட்டி’ மற்றும் ‘கபிர் சிங்’ படங்களிலும் கூட பிரச்சினை இருந்தது.
அனிமல்
ஆனால் நான் இயக்குநரைக் குறை கூறமாட்டேன். ஏனென்றால் அவரைப் பொறுத்தவரை, வெற்றிதான் முக்கியம். சமூகத்தில் என்ன நடக்கிறது என்பதை படங்களில் காட்டுகிறோம். நாங்கள் பெண்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை பற்றி பேசுகிறோம் என்று சொல்வார்கள்.

எனினும் மக்கள் அத்தகைய படங்களை பார்க்கிறார்கள். என் மகள்கள் அதுபோன்ற படங்களைப் பார்ப்பதை நான் விரும்பவில்லை. ஆனால் அது எதைப் பற்றி பேசுகிறது என்பதை அறிய விரும்பியதால் அவர்கள் ‘அனிமல்’ படத்தை பார்த்தார்கள். அவர்கள் திரும்பி வந்து, அம்மா தயவு செய்து அந்த படத்தைப் பார்க்காதீர்கள் என்று எச்சரித்தார்கள்.
இப்படிப்பட்ட படங்களுக்கு ரிப்பீட் ஆடியன்ஸ் உருவாகும்போது நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்று தோன்றுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
யாழில் ஆட்டத்தை ஆரம்பிக்கும் அநுர..! அடுத்தடுத்து முற்றுகையிடப்படும் ஈ.பி.டி.பி அலுவலகங்கள் IBC Tamil
தேர்தல் மேடைகளில் போர் வீரராக தன்னை முன்னிறுத்திய கோட்டாபயவின் உண்மை முகம் நீதிமன்றத்தில் அம்பலம் IBC Tamil