ரஜினியுடன் அந்த படத்தில் ஏன் நடிசோம்னு தோணுது..அங்க நடந்ததே வேற - குஷ்பூ புலம்பல்!

Rajinikanth Tamil Cinema Kushboo
By Swetha Jul 11, 2024 07:06 AM GMT
Report

நடிகை குஷ்பூ அண்ணாத்த திரைப்படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

ரஜினி படத்தில்..

கடந்த 2021 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் வெளியானது. அண்ணன் தங்கை கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திருமணம் பல விமர்சனங்களை பெற்றது.

ரஜினியுடன் அந்த படத்தில் ஏன் நடிசோம்னு தோணுது..அங்க நடந்ததே வேற - குஷ்பூ புலம்பல்! | Khushboo Share Her Experience Of Acting In Annathe

இதில் நடிகை குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், வேலராமமூர்த்தி என்று பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். இந்த நிலையில் பல வருடங்கள் கழித்து இந்த திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து குஷ்பூ பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், அண்ணாத்த படத்தில் நான் நடித்ததை இப்போ யோசித்துப் பார்த்தால் நான் அந்த படத்தில் நடித்திருக்கக் கூடாது என்று எனக்கு தோணுகிறது. நான் அந்த படத்தை ஒத்துக் கொள்வதற்கு காரணம் என்னிடம் அப்போது ரஜினி சாருக்கு ஜோடி இல்லை என்று சொன்னார்கள்.

விஜயகாந்த்தை நக்கல் செய்து சிரித்த ஹிந்திக்காரர்கள்...சண்டைக்கு சென்ற குஷ்பூ - என்ன நடந்தது?

விஜயகாந்த்தை நக்கல் செய்து சிரித்த ஹிந்திக்காரர்கள்...சண்டைக்கு சென்ற குஷ்பூ - என்ன நடந்தது?

குஷ்பூ புலம்பல்

எங்க கிட்ட சொன்ன கதையில் எங்களுக்கு முக்கியத்துவம் இருந்தது. இன்டர்வெலுக்கு பிறகு தங்கச்சியை ரஜினி தேடி போராருன்னா ஒரு பக்கம் நான் போவேன் இன்னொரு பக்கம் மீனா போவதாக கதை எங்களிடம் சொல்லப்பட்டது.

ரஜினியுடன் அந்த படத்தில் ஏன் நடிசோம்னு தோணுது..அங்க நடந்ததே வேற - குஷ்பூ புலம்பல்! | Khushboo Share Her Experience Of Acting In Annathe

நாங்களும் லொகேஷனில் பேசும்போது ஒன்சைடு காதல் தானே இருக்கு அதற்கு சின்ன பட்ஜெட்டில் ஒரு நடிகை போட்டால் போதும் என்று இரண்டு மூன்று நடிகைகளின் பெயரை சொல்லிக் கொண்டிருந்தாங்க. ஏன்னா ரஜினி சாருக்கு டூயட் சாங் எல்லாம் கிடையாது என்று சொல்லிட்டு இருந்தாங்க.

இன்டெர்வலோட எங்களுடைய கேரக்டர் முடிஞ்சிடுச்சு நாங்க ஏன் வரோம் எதுக்கு வரோம்ங்கிறதே தெரியாமல் போயிடுச்சு. அது வருத்தமாக தான் இருந்தது. ஆனாலும் இயக்குனர் சிவா, கேமரா மேன் வெற்றி இவங்க எல்லாம் ரொம்ப திறமையானவங்க. அவங்களோட பேசிய அனுபவம் கிடைத்தது அவ்வளவுதான் என்று பேசியுள்ளார்.