விஜயகாந்த்தை நக்கல் செய்து சிரித்த ஹிந்திக்காரர்கள்...சண்டைக்கு சென்ற குஷ்பூ - என்ன நடந்தது?
விஜயகாந்த்துக்காக குஷ்பூ சண்டைக்கு சென்ற சம்பவம் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
விஜயகாந்த்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராகவும் இருந்தவர் கேப்டன் விஜயகாந்த். கடந்த டிசம்பர் மாதம் 29ஆம் தேதி உடல்நல குறைவு காரணமாக காலமானார்.

இந்த நிலையில், விஜயகாந்த்துக்காக நடிகை குஷ்பூ சண்டைக்கு சென்ற சம்பவம் தெரியவந்திருக்கிறது. அதாவது, தமிழ் சினிமாவில் ஃபெப்சி பிரச்னை நடந்துகொண்டிருந்தபோது ஹிந்தி திரையுலகத்திலிருந்து சிலர் வந்திருந்தார்களாம். அவர்களில் பலர் கடுமையாக பந்தா செய்துகொண்டிருந்தார்களாம்.
குஷ்பூ
ஒருமுறை அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு விஜயகாந்த்தும், குஷ்பூவும் ஒரு வேலைக்காக சென்றிருக்கிறார்கள். அந்த நேரத்தில், விஜயகாந்த்தை பார்த்து அவர்கள், 'இவன்லாம் ஒரு ஹீரோவா' என்று ஹிந்தியில் நக்கல் செய்து சிரித்திருக்கிறார்கள். மேலும் விஜயகாந்த் அமர்வதற்கு நாற்காலியும் போடவில்லையாம்.

இதனைப் பார்த்து கடுப்பான குஷ்பூ அவர்களிடம் சண்டைக்கு சென்றுவிட்டாராம். ஆனால் விஜயகாந்த்நமக்கு காரியம்தான் முக்கியம். அமைதியாக இரு. அவர்களுக்கு என்ன வேண்டுமென்று கேள் என கூறி அந்த சூழ்நிலையை சுமூகமாக கையாண்டாராம். இதனை குஷ்பூ ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.
செவ்வாய் - சனி கேந்திர யோகம்: செப்டம்பர் மாதத்தின் முதல் நாளே அதிர்ஷ்ட யோகம் பெறும் ராசிகள்! Manithan
பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த நாய்கள் IBC Tamil