இந்தியாவோட பொக்கிஷம் அவர்; எழுதி கூட தரேன் - கோலி புகழ்ந்த வீரர் யார் தெரியுமா?
பும்ராவை இந்திய நாட்டின் பொக்கிஷம் என கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.
வெற்றிப் பேரணி
டி20 உலகக்கோப்பையை 2வது முறையாக வென்று இந்திய அணி தாயகம் திரும்பியுள்ளது. தொடர்ந்து இந்தியா வந்த வீரர்கள் காலையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர்.
மும்பையில் நடந்த வெற்றிப் பேரணியில் இந்திய வீரர்கள் திறந்த வெளி பேருந்தில் வலம் வந்தனர். இதன்பின் வான்கடே மைதானத்தில் நடந்த பாராட்டு விழாவில் இந்திய அணி வீரர்கள் கலந்து கொண்டனர்.
அதில் விராட் கோலி பேசுகையில், ஐசிசி கோப்பையை வெல்ல வேண்டும் என்று நானும், ரோகித் சர்மாவும் நீண்ட நாட்களாக முயற்சித்து வந்தோம். பும்ரா ஒரு தலைமுறைக்கான பவுலர். இவர் இந்திய அணிக்காக விளையாடுவது எங்களின் அதிர்ஷ்டம். ஒருவரை நான் பாராட்ட விரும்புகிறேன்.
கோலி புகழாரம்
எப்போதெல்லாம் இந்திய அணி பின் தங்கியதோ, அப்போதெல்லாம் கம்பேக் கொடுக்க காரணமாக இருந்தார். அவருக்காக மிகப்பெரிய கரகோஷத்தை எழுப்ப கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார். உடனே, நெறியாளர் கவுரவ் கபூர்,
பும்ராவை இந்திய நாட்டின் பொக்கிஷமாக அறிவிக்கக் கோரி மனு ஒன்றை எழுத யோசித்து வருகிறேன். நீங்கள் கையெழுத்து போடுவீர்களா என்று கேட்க, உடனடியாக கையெழுத்து போடுகிறேன் என்று தெரிவித்தார்.