ஹர்திக்கை நான் தான் ரொம்ப பேசிட்டேன் - தவறை ஒத்துக்கிட்ட இந்திய முன்னாள் வீரர்!
வீழ்ந்த இடத்தில் தான் எழவேண்டும் என்பதற்கு இணங்க, ஹர்திக் பாண்டியா நேற்று கெத்தாக மும்பை வான்கடே மைதானத்தில் அமர்ந்திருந்தார்.
ஹர்திக் பாண்டியா
கடுமையாக விமர்சிக்கப்பட்ட வீரர்களில் ஒருவராக இருந்த ஹர்திக் பாண்டியா, வான்கடே மைதானத்தில் நேற்று ரசிகர்கள் கரகோஷத்தில் மத்தியில் அமர்ந்திருந்தார்.
அவர் மீது விமர்சனங்களை வைத்த பலரும், தற்போது தங்களது கருத்துக்களை பின்வாங்கியுள்ளார்கள். அப்படி தான் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் இர்பான் பதானும் பேசியுள்ளார்.
நான் தான்
அவர் பேசும் போது, ஹர்திக் பாண்டியாவுக்கு இது ஒரு சிறப்பான பயணம். எல்லா விமர்சனங்களிலிருந்தும் மீண்டு வரும்போது, ஐபிஎல் நேரத்தில் அவர் செயல்படாததால் அவரை விமர்சித்தவன் நான்தான்.
இன்னும் 6 மாசம் மட்டும் தான் - ஒரு நாள் போட்டியில் இருந்து தூக்கும் கம்பீர்? சிக்கலில் விராட் - ரோகித்!!
அப்போது அவர் நிறைய தவறுகளை செய்து கொண்டிருந்தார் என்றார். அங்கிருந்து திரும்பி வந்து உலகக் கோப்பையை வெல்வது சிறப்பு. அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ரோஹித் ஷர்மாவுடன், ஜஸ்பிரித் பும்ராவுடன், இந்திய கிரிக்கெட் அணிக்கு மாற்றத்தை ஏற்படுத்த அவர் செய்த செயல்திறன் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று பதான் கூறினார்.