ராமருக்கு சிவன் கடும் போட்டி கொடுப்பார் - நெருக்கடியில் மாட்டிக்கொண்ட கார்கே
தேர்தல் பிரச்சார களம் நாட்டில் சூடுபிடித்துள்ளது.
பிரச்சாரம்
மக்களவை தேர்தல் பிரச்சார களம் பெரும் பரபரப்பாக இயங்கி வருகின்றது. தமிழகத்தில் தேர்தல் முடிந்த நிலையில், மதவாத அரசியல் பேச்சுக்கள் தேசிய அளவில் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளன.
காங்கிரஸ் கட்சி மீது பாஜகவினரும், ஆளும் மத்திய பாஜகவினர் மீது காங்கிரஸ் கட்சியினரும் சரமாரி குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்கள். குறிப்பாக மதம் குறித்தான பேச்சுக்கள் தொடர்ந்து தலைவர்களின் பேச்சுக்களில் அடிபடுகிறது.
முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை நீக்குவோம் என அமித் ஷாவும், காங்கிரஸ் பெண்களின் தாலியை பறிக்கப் பார்க்கிறது என மோடியும் மிகவும் பரபரப்பாக பேசினார்கள்.
ராமர் அரசியலும் இந்தியாவில் பெரும் இடத்தை பிடித்துள்ளது. இந்த சூழலில் தான் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சிக்கல் ஒன்றில் சிக்கியுள்ளார்.
மாட்டிக்கொண்ட கார்கே
சத்தீஸ்கரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜஸங்கிர்-சம்பா தொகுதி பிரச்சார வேட்பாளர் சிவக்குமார் தஹாரியாவை ஆதரித்து அவர் பேசும் போது, இவரின் பெயர் பெயர் சிவக்குமார், ராமருக்கு கடுமையாக போட்டியை(தேர்தலில்) கொடுக்க முடியும் என்றார்.
Congress President Kharge-
— Megh Updates ?™ (@MeghUpdates) April 30, 2024
Our candidate's name is Shiva; he can equally compete with Ram pic.twitter.com/axDEdEC9Kl
ராமர் குறித்து பிரதமர் பேசிவருவதை காங்கிரஸ் கட்சியினர் மதவாத அரசியல் பேசுகிறார் என விமர்சிக்கும் நிலையில், தற்போது கார்கேவின் பேச்சை பாஜகவினர் எதிர்க்க துவங்கியுள்ளனர்.