பெண்கள் தாலியை பாஜக பறிக்க முயன்றால் -அதனை தடுத்து நிறுத்துவோம் - கார்கே உறுதி
தேர்தல் பிரச்சாரம் மக்களவை தேர்தல் பிரச்சார களம் பெரும் பரபரப்பாக இயங்கி வருகின்றது. தமிழகத்தில் தேர்தல் முடிந்த நிலையில், மதவாத அரசியல் பேச்சுக்கள் தேசிய அளவில் பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளன.
காங்கிரஸ் கட்சி மீது பாஜகவினரும், ஆளும் மத்திய பாஜகவினர் மீது காங்கிரஸ் கட்சியினரும் சரமாரி குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்கள். குறிப்பாக தேர்தல் மேடைகளில் காங்கிரஸ் கட்சி மீது பிரதமர் மோடி பெரும் குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்க வைத்து வருகின்றார்.
தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், காங்கிரஸ் கட்சி பெண்களின் தாலியை கூட விட்டுவைக்க மாட்டார்கள் என சாடினார். இது நாடெங்கிலும் இருக்கும் காங்கிரஸ் கட்சி தலைவர்களிடம் இருந்து பெரும் விமர்சனத்தை பெற்றது. இதற்கு தற்போது கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே பதிலடி கொடுத்துள்ளார்.
கார்கே உறுதி
இது குறித்து கர்நாடகா மாநிலம் கலபுர்கியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், நாட்டின் சொத்துக்களை காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு கொடுத்துவிடும் என அவர்கள் கூறியதை போன்று நிஜாம்களின் காலத்தில் கூட நடந்தித்தில்லை என்றார்.
தொடர்ந்து பேசியவர், ஒரு வேலை பாஜக பெண்களின் தாலியை பறிக்க முயன்றால் அதனை காங்கிரஸ் கட்சி தடுத்து நிறுத்தும் என்றும் உறுதியாக தெரிவித்தார்.
காங்கிரஸ் நாட்டிற்காக தங்களது தலைவர்களை இழந்துள்ளது என்று கூறி, இந்திரா காந்தி பிரதமராக இருந்த போதும், ஜெகஜீவன் ராம் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த போதும் இதே குற்றச்சாட்டு தான் வைக்கப்பட்டது என்று சுட்டிக்காட்டினார்.