இந்திய தேசிய கொடியை எரித்த காலிஸ்தான் ஆதரவாளர்கள்...என்ன நடவடிக்கை எடுப்பார்கள்?

Government Of India India
By Karthick Jun 07, 2024 01:05 PM GMT
Report

நாட்டின் தேசிய கொடியை காலிஸ்தான் ஆதரவாளர்கள் கிழித்தும், எரித்தும் அவமானப்படுத்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

காலிஸ்தான் 

ஜூன் 6 ஆபரேஷன் புளூ ஸ்டாரின் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. ஆபரேஷன் புளூ ஸ்டார் என்பது 1984 ஆம் ஆண்டு ஜூன் 1 மற்றும் 10 ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் சீக்கியப் போராளி ஜர்னைல் சிங் பிந்த்ரன்வாலே மற்றும் சீக்கிய மதத்தின் புகழ்பெற்ற தளமான பொற்கோயிலின் கட்டிடங்களில் இருந்து மற்ற சீக்கியப் போராளிகளை அகற்றுவதற்காக இந்திய ஆயுதப்படையின் நடவடிக்கையாகும்.

Khalistan

சமீபக்காலமாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் காலிஸ்தான் அமைப்பின் செய்திகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருக்கின்றன. அண்மையில், கனடாவில் வான்கூவரில் உள்ள இந்திய துணை தூதரகத்திற்கு வெளியே, காலிஸ்தான் பிரிவினைவாதிகள் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலையை கொச்சைப்படுத்தும் வகையில் நடந்து கொண்டனர்.

காலிஸ்தான் விவகாரம் - நாடுமுழுவதும் 50 இடங்களில் NIA சோதனை

காலிஸ்தான் விவகாரம் - நாடுமுழுவதும் 50 இடங்களில் NIA சோதனை

கொடி அவமானம் 

இந்திரா காந்தியை துப்பாக்கி தோட்டாக்களால் துளைப்பது போலவும் இந்திரா காந்தியை கொலைசெய்தவர்களான பியாந்த் சிங் மற்றும் சத்வந்த் சிங் ஆகியோருக்கு மரியாதை செலுத்தும் சுவரொட்டிகள் முக்கியமாகக் காட்டப்பட்டன. மேலும் அவர்கள், இந்தியா நாட்டின் கொடியை மிகவும் கீழ்த்தரமாக கையாண்டுள்ளனர்.

khalistan insulting india flag vancouver

தேசிய கொடியை எரித்தும், கத்தியால் கிழித்து மிகவும் வெறுக்கத்தக்க வகையில் நடந்துகொண்டுள்ளனர். இந்த அதிர்ச்சிகர வீடியோவை கண்ட பலரும் இவர்களுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். தங்களின் அபிமானத்தை வெளிப்படுத்துவது சரி.

ஆனால், ஒரு தேசத்தின் கொடியை அவமதிக்கும் வகையிலும், நாட்டின் முன்னாள் பிரதமரை இழுவுபடுவதும் ஏற்றுக்கொள்ள முடியாது விஷயமாகும். இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள் என்றும் பலரும் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.