காலிஸ்தான் விவகாரம் - நாடுமுழுவதும் 50 இடங்களில் NIA சோதனை
இந்திய அரசிற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள காலிஸ்தான் பிரச்சனையில் தேசிய புலனாய்வு முகமை இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை
வெளிநாடுகளில் காலிஸ்தான் பிரிவினைவாத கும்பல்களின் தலைவர்கள் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது வரும் நிலையில்,இந்தியா - கனடா நாடுகளுக்கு இடையே இது பெரும் இடைஞ்சல்களை ஏற்படுத்தி வருகின்றது.
இந்த காலிஸ்தான் அமைப்புகளை சேர்ந்தவர்கள் போதைப் பொருட்கள் கடத்தல், ஆட்கடத்தல் போன்ற பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள கும்பல்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் பரவலாக குற்றசாட்டுகள் வடஇந்தியாவில் வைக்கப்பட்டு வருகின்றது.
50 இடங்களில் சோதனை
இது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பிற்கு கிடைத்துள்ள தகவல்களின் படி, பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் மற்றும் உத்ரகாண்ட் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் 50 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் பஞ்சாப் மற்றும் பாகிஸ்தானின் லாகூர் போன்ற பகுதிகளை இணைத்து காலிஸ்தான் என்ற தனிநாடு உருவாக்க இந்த காலிஸ்தான் அமைப்புகள் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்ட வருவது குறிப்பிடத்தக்கது.