கேஜிஎப் 2 படத்தின் ரிலீஸ் எப்போது? அதிகாரபூர்வமாக அறிவிக்கும் படக்குழு

movie yash chapter
By Jon Jan 29, 2021 11:52 AM GMT
Report

கே.ஜி.எஃப்: சாப்டர் 2' படத்தின் வெளியிடு எப்போது என்பதை அந்த படத்தின் இயக்குநர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். கன்னடத்தில் உருவான, 'கே.ஜி.எஃப்' படம் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மொழிகளில் கடந்த 2018 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.

அனைத்து மொழிகளிலும் இந்தப் படம் வரவேற்பை பெற்றதை அடுத்து, இதன் இரண்டாம் பாகம், உருவாகி வருகிறது. ஶ்ரீனிதி ஷெட்டி முதல் பாகத்தை இயக்கிய பிரசாந்த் நீல், 'கே.ஜி.எஃப்: சாப்டர் 2 என்ற இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். முதல் பாகத்தில் நடித்த ஶ்ரீனிதி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். ரவீனா டாண்டன், ஆனந்த் நாக், மாளவிகா அவினாஷ் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இந்தி நடிகர் சஞ்சய் தத், அதீரா என்ற கேரக்டரில் வில்லனாக நடிக்கிறார். இரண்டாம் பாகத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.நிலையில், படம் எப்போது வெளியாக உள்ளது என்பது பற்றி படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் தனது ட்விட்டர் பதிவில்அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

அதனபடி இன்று மாலை 6:30 மணிக்கு படத்தின் வெளியிடு குறித்து தெரிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர் நோக்கி உள்ளனர்.