Breaking news - கைக்கெட்டாத கோப்பை - வேறு அணியில் விராட் - அதிர்ச்சி தகவல் சொன்ன முன்னாள் வீரர்
விராட் கோலி ஐபிஎல் தொடரில் துரதிர்ஷ்ட சாலியாகவே பார்க்கப்படுகிறார்.
விராட் கோலி
சென்னை மும்பை அணிகளை போலவே ரசிகர்கள் கூட்டம், பெரிய நட்சத்திர வீரர்கள் என பல இருந்தும் இது வரை ஒரு முறை கூட ஆர்சிபி அணி கோப்பையை வெல்லவில்லை.
கடந்த 17 ஆண்டுகளில் இதுவே வரை 9 முறை Play off வாய்ப்பை பெற்றுள்ள ஆர்சிபி அணி 3 முறை இறுதி போட்டியில் விளையாடியும் தோல்வியடைந்துள்ளது.
அந்த அணியின் துரதிஷடவசமான விஷயமாகவே இது தொடருகிறது. ஒவ்வொரு வருடமும் தனது சிறப்பான பங்களிப்பை அளிப்பதில் தவறுவதில்லை விராட் கோலி.
17 ஆண்டுகளாக தொடர்ந்து அந்த அணிக்காக மட்டுமே விளையாடி வரும் அவர், ஒரு முறை கூட ஐபிஎல் கோப்பையை கையில் ஏந்தியதில்லை. இது வரை இரண்டு முறை 2016- 973 ரன்கள், 2024- 741 ரன்கள் வென்றுள்ள விராட், சிறப்பான வீரராகவே இருக்கிறார். ஆனால், அவரால் தொடரை வெல்ல முடியவில்லை.
வேறு அணிக்கு...
வீரராக சிறப்பான ஆட்டத்தை வெலிப்படுத்தும் விராட், அணியாக சொதப்புவதாக இங்கிலாந்து அணியின் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். அவர் பேசும் போது, விராட் கோலி ஒவ்வொரு சீசனிலும் பெங்களூரு அணிக்காக சிறப்பாக விளையாடுகிறார்.
அந்த அணிக்காக 2 முறை அரேஞ் தொப்பியை கைப்பற்றியுள்ளார். இருந்தபோதும் ஒரு அணியாக அவர்கள் தொடர் தோல்விகளை சந்திக்கின்றனர். விராட் கோப்பையை வெல்ல தகுதியானவர்.
எனவே அவர் RCB அணியை விடுத்து வேறு அணிக்கு சென்றால் நன்றாக இருக்கும். ஒருவேளை அந்த அணி டெல்லியாக இருந்தால் அவருக்கு மேலும் பொருத்தமாக இருக்கும்.