பெற்ற தாயை கொன்ற மகள்.. விஷம் வைப்பது எப்படி? கூகுளில் தேடிய கொடூரம்!
மகளே தாயை டீ-யில் எலி மருந்து கலந்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துயுள்ளது.
டீ-யில் எலி மருந்து
கேரளா, திருச்சூர் மாவட்டம் குன்னங்குளம் கீழூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவரின் மனைவி ருக்மணி(58). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஒரு மகள் இந்துலேகா(36) இவர்களுடன் வசித்து வருகிறார்.
இந்துலேகாவின் கணவர் துபாயில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இந்துலேகா கணவனுக்கு தெரியாமல் எட்டு லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்த நிலையில் கணவர் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வருவதாக கூறியதை அடுத்து கடனை உடனடியாக அடைக்க முடிவு செய்தார்.
தாயை கொன்ற மகள்
ஆனால் கையில் பணம் இல்லாததால் பெற்றோர் பெயரில் உள்ள வீடு மற்றும் 14 சென்ட் நிலத்தை சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றி, பின்னர் சொத்தை விற்று கடனை அடைக்க திட்டமிட்டுள்ளார்.
இதனால் பெற்றோரை கொல்ல முயற்சித்து டீ-யில் எலியை கொல்லும் மருந்தை கலந்து குடிக்க கொடுத்துள்ளார். தாய் ருக்மணி டீ-யை குடித்துள்ளார். ஆனால், சுவையில் மாற்றம் தெரிந்ததால் தந்தை சந்திரன் டீ குடிக்கவில்லை.
கூகுளில்...
இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து ருக்மணி உடலை பிரேத பரிசோதணை செய்ததில், விஷம் அருந்தியிருப்பது தெரிய வந்தது.
இதனால் சந்தேகித்த போலீஸார் அவர் குடும்பத்திடம் நடத்திய விசாரணையில், போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, மகள் இந்துலேகாவின் செல்போனை சோதனை செய்ததில் விஷம் கொடுத்து எப்படி கொலைச்செய்யலாம்' என கூகுளில் தேடியுள்ளதை கண்டுபிடித்துளோம்.
கடன் பிரச்சனை
பெற்றோரை கொல்வதற்காக இரண்டு மாதம் முன்பே 20 டோலோ மாத்திரைகளை வாங்கி வைத்துள்ளார். தாயை கொலைச்செய்ய பயன்படுத்தியதுபோக மீதமுள்ள எலி விஷத்தையும், விஷம் கொடுக்க பயன்படுத்திய பாத்திரத்தையும் கைப்பற்றியுள்ளோம்.
சிகிச்சையில் இருந்த ருக்மிணி-யிடம் உடலில் விஷம் எதாவது சென்றதா என மருத்துவர்கள் கேட்டிருக்கிறார்கள். இதுபற்றி மகள் இந்துலேகாவிடம் கேட்டுள்ளார் தாய் ருக்மிணி. 'மரணப்படுக்கையில் கிடக்கும்போது இப்படியெல்லாம் பேசாதீங்க' என இந்துலேகா கூறியுள்ளார்.
தாய் மருத்துவமனையில் இருக்கும்போது தந்தையிடம் ஒரு பொட்டலத்தை கொடுத்து இதை வெளியே வீசிவிடுமாறு கூறியுள்ளார் இந்துலேகா. அதில் என்ன இருக்கிறது என கேட்டதற்கு எலி விஷம் என சொல்லியிருக்கிறார்.
இது எங்கிருந்து வந்தது என தந்தை கேட்டதற்கு எலித்தொல்லையால் நான் தான் வாங்கினேன் என சொல்லியிருக்கிறார். இப்போது இந்துலேகாவின் கணவர் ஊருக்கு வந்துள்ளார். இந்துலேகா எதற்காக கடன் வாங்கினார் என்பதுபற்றியும் விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.