கேரளாவை ஆட்டிப்படைக்கும் மாந்திரீகம்: சிறுவர்களை வைத்து பெண் அதிர்ச்சிகர செயல்!

Kerala Crime
By Sumathi Oct 13, 2022 11:02 AM GMT
Report

சிறுவர்களை வைத்து மந்திரவாதம் செய்து வந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

மந்திரவாதம்

கேரளா, பத்தனம் திட்ட மாவட்டம், மலையாலப்புழா பகுதியைச் சேர்ந்தவர் தேவகி. இவர் அங்குள்ள வாசந்திமடம் என்ற வீட்டை மந்திரவாடஹ்ம் செய்ய பயன்படுத்தியுள்ளார். மேலும், இதற்காக சிறுவர்களை அவர் பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.

கேரளாவை ஆட்டிப்படைக்கும் மாந்திரீகம்: சிறுவர்களை வைத்து பெண் அதிர்ச்சிகர செயல்! | Kerala Woman Sorcerer Arrested

தொடர்ந்து, இதுகுறித்து அறிந்து அங்கு திரண்ட பொது மக்கள் மற்றும் பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களும் அந்த வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடி உள்ளனர். இந்த வீட்டில் இது போன்ற மந்திரவாதம் நடைபெருவதாகவும் அதில் சிறுவர்களை ஈடுபடுத்தி வருவதாகவும் ஏற்கனவே பல புகார்கள் எழுந்துள்ள நிலையில்

 பெண் கைது

தற்போது ஒரு சிறுவனை மந்திரவாதத்தில் ஈடுபடுத்துவதும் அப்போது அந்த சிறுவன் மயங்கி விழும் அதிர்ச்சிகர காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனையடுத்து இந்த சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு முன் அதே மாவட்டத்தில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் இன்னும் ஆறாதது குறிப்பிடத்தக்கது.