மீசை இல்லாமல் இருக்க முடியாது - அனுபவம் பகிரும் இளம்பெண்!
ஆண்கள் மட்டுமே மீசையுடன் இருப்பதை பார்த்து வந்த மக்களுக்கு பெண் ஒருவர் மீசையுடன் காட்சி அளிப்பது வியப்பை ஏற்படுத்தியது.
மீசை
கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் ஷைஜூ. (வயது 35). ஷைஜூவின் முகத்தில் ஆண்களை போல முறுக்கு மீசை உள்ளது. இந்த படத்தை அவர் சமூகவலைதளத்தில் தனது டி.பி.யாக வைத்துள்ளார்.

ஆண்கள் மட்டுமே மீசையுடன் இருப்பதை பார்த்து வந்த மக்களுக்கு பெண் ஒருவர் மீசையுடன் காட்சி அளிப்பது வியப்பை ஏற்படுத்தியது. அதோடு மட்டுமல்ல ஷைஜூவை கேலியும் செய்தனர்.
பெண் மீசையுடன் காட்சி
இதுகுறித்து ஷைஜூவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது, நான் ஃபேஸ்புக்கில் எனது புகைப்படத்தை பதிவிடும்போதெல்லாம் பலரும் என்னை விமர்சிப்பார்கள். ஒரு பெண் எப்படி மீசை வைத்துகொள்வாள். இது தவறில்லையா என பலரும் விமர்சிப்பார்கள். நான் அவ்வப்போது புருவத்திலுள்ள முடிகளை அகற்றிக்கொள்வேன்.

ஆனால் ஒருபோதும் எனது மீசையை எடுக்க நினைத்தது இல்லை. 5 வருடங்களுக்கு முன்னால், எனது மீசையை நான் அடர்த்தியாக வளர்க்க முடிவு செய்தேன். இப்போது என்னால் மீசை இல்லாமல் இருக்க முடியாது.
குடும்பம் உறுதுணை
இதன் காரணமாக கொ ரோனா காலத்தில் நான் முகக்கவசம் அணிவதையே வெறுத்தேன். நான் மீசை வைத்திருப்பதனால் அழகாக இல்லை என்று நான் நினைத்ததே இல்லை. இது என்னை விமர்சிப்பவர்களுக்கான பதிலாக நான் கூறவில்லை. உண்மையில் இந்த மீசைதான் நான்.
எனது உடல் பிரச்சினைக் காரணமாக எனக்கு இதுவரை 5 அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. இந்த அறுவை சிகிச்சைகளுக்கு இடையே இந்த மீசை எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. எனது குடும்பமும், எனது நண்பர்களும் எனக்கு எப்போதும் துணையாக இருக்கிறார்கள்.
கேரளா முற்போக்கான மாநிலம் என்றாலும் பெண்கள் தனியாக வெளியே சென்றால் இன்னமும் விமர்சிக்கும் நிலை உள்ளது. ஆனால், நான் அதுகுறித்து எல்லாம் அச்சம் கொள்வதில்லை. நான் தனியாகப் பயணிக்கிறேன். எனக்கு வேண்டியவற்றை நானே செய்து கொள்கிறேன்” என பூரிப்புடன் பகிர்கிறார்.