ஆண்களே மீசை, தாடி வேகமாக அடர்த்தியா வளரனும்னு ஆசைப்படுறீங்களா? இத ஃபாலோ பண்ணுங்க...!

beauty-helath-face
By Jon Jan 11, 2021 02:13 PM GMT
Report

மீசை, தாடி முடிகளை வேகமாக அடர்த்தியாக வளர வைக்கக்கூடிய அருமையான வழிமுறைகளை பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம். சில ஆண்களின் முகத்தில் உள்ள தாடி, மீசை பார்பதற்க்கே அவ்வளவு அழகாக இருக்கும். ஆனால் சில பேருக்கு மீசை அடர்த்தியாக வளரும்.

தாடி சுத்தமாக வளராது. மேலும் ஒரு சிலருக்கு தாடி நன்றாக வளரும். மீசை வளராமல் பூனை மீசை போன்று இருக்கும். இந்த பிரச்சனைக்கு காரணம் டெஸ்டோஸ்டிரோன் என்ற ஹார்மோன் குறைவாக சுரப்பது. வெங்காயத்தில் முடியின் வளர்ச்சியை தூண்டக்கூடிய சத்துக்கள் அனைத்தும் உள்ளது.

வெங்காயத்தை துருவி அதன் சாறை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். 2 ஸ்பூன் வெங்காய சாறுடன் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் , வைட்டமின் ஈ மாத்திரை திரவம் ஆகியவற்றை நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இந்த திரவத்தை இரவு தூங்குவதற்கு முன் உங்கள் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவிய பின் மீசை, தாடி வளரும் பகுதியில் தடவி மசாஜ் செய்யவேண்டும். இப்படி செய்வதால் அங்கு முடியின் வளர்ச்சி தூண்டப்படுகிறது. இரவு முழுவதும் ஊறவிட்டு காலை குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவேண்டும்.

இவ்வாறு செய்தால் உங்களின் மீசை மற்றும் தாடி படிப்படியாக அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும். தொடர்ந்து ஒரு வாரம் இதை பயன்படுத்தவேண்டும். சில பேருக்கு வெங்காயத்தின் வாசனை பிடிக்காது. இதற்கு பதிலாக கருஞ்சீரகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இது முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

இதை மிக்சியில் அரைத்து பொடி செய்து கொள்ளுங்கள். ஒரு ஸ்பூன் அரைத்த கருஞ்சீரக பொடியுடன் 1 ஸ்பூன் விளக்கெண்ணெய், 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு வைட்டமின் ஈ மாத்திரை திரவத்தை சேர்த்து நன்றாக கலந்து மீசை, தாடி வளரும் பகுதிகளில் தடவிவர நல்ல பலன் கிடைக்கும்.