அழகா இருந்தது தப்பா? மொட்டை அடித்த கணவன்.. பெண் தற்கொலை!

Arab Countries Kerala Death
By Sumathi Jul 15, 2025 03:58 PM GMT
Report

அழகா இருப்பதாக துன்புறுத்தப்பட்டதால் பெண் தற்கொலை செய்துள்ளார்.

கணவன் தொல்லை

கேரளா, கொல்லத்தில் வசித்து வந்தவர் விபன்சிகா மணியன் (32). திருமணம் முடிந்து கணவருடன் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றார்.

விபன்சிகா மணியன்

ஷார்ஜாவில் கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினருடன் ஒன்றாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்பில் விபன்சிகாவும், அவருடைய ஒரு வயது மகளும் சடலமாக கிடந்தனர். தகவலறிந்து போலீஸ் விசாரித்ததில்,

அந்த இடத்தில் இருந்து மலையாளத்தில் எழுதப்பட்ட குறிப்பு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் மனஅழுத்தம் மற்றும் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் பற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தொடர்ந்து விபன்சிகா பெற்றோர் அளித்த புகாரில், திருமணம் முடிந்ததும்,

விவாகரத்தை 40 லிட்டர் பாலை வாங்கி.. குளித்து கொண்டாடிய இளைஞர் - என்னனு பாருங்க

விவாகரத்தை 40 லிட்டர் பாலை வாங்கி.. குளித்து கொண்டாடிய இளைஞர் - என்னனு பாருங்க

பெண் தற்கொலை

வரதட்சணை கேட்டு தொடர்ச்சியாக மணியன் தொல்லை கொடுத்து வந்தார். அவள் சிவப்பாக இருப்பாள். நிதீசும் அவருடைய குடும்பத்தினரும் சற்று மங்கலான நிறத்தில் இருப்பார்கள். அவள் அழகாக தெரிய கூடாது என்பதற்காக அவளுடைய முடியை வெட்டினார். மொட்டை அடித்து விட்டார்.

அழகா இருந்தது தப்பா? மொட்டை அடித்த கணவன்.. பெண் தற்கொலை! | Kerala Woman Commits Suicide In Sharjah For Beauty

பல பெண்களோடு நிதீசுக்கு தொடர்பு இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக, பேத்தி வைபவியை உடலளவில் நிதீஷ் துன்புறுத்தினார்.இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், ஷார்ஜாவின் அல் நாடா பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பில், கடந்த சில விபன்சிகா தனியாக வசித்து வந்திருக்கிறார்.

ஆனால், நிதீஷ் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். தொடர்ந்து கொடுத்த தொல்லையை பொறுக்க முடியாமல் விபரீத முடிவை அவள் எடுத்து விட்டாள் என்று கூறியுள்ளனர். தற்போது இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.