வீட்டிற்குள்ளேயே 5 அடி குழி - கணவனை கொன்று புதைத்த மனைவி!

Attempted Murder Assam Crime Death
By Sumathi Jul 15, 2025 01:00 PM GMT
Report

 கணவரை கொலை செய்து வீட்டிக்குள்ளேயே புதைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

குடும்ப விவகாரம்

அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சபியல் ரஹ்மான். இவரது மனைவி ரஹிமா கதுன். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

சபியல் ரஹ்மான் - ரஹிமா கதுன்

திருமணமாகி 15 வருடங்கள் ஆன நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது . அந்த வகையில் ஒருநாள் வாக்குவாதம் முற்றவே, இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். இதில் ஆத்திரத்தில் கணவர் ரஹ்மானை ரஹிமா கொலை செய்துள்ளார்.

பின் கணவர் வேலைக்காக கேரளா சென்றுள்ளதாக அனைவரிடமும் சமாளித்துள்ளார். இதனையடுத்து ரஹிமா, உடல்நிலை சரியில்லை என்று கூறி மருத்துவமனிக்குச் செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

விவாகரத்தை 40 லிட்டர் பாலை வாங்கி.. குளித்து கொண்டாடிய இளைஞர் - என்னனு பாருங்க

விவாகரத்தை 40 லிட்டர் பாலை வாங்கி.. குளித்து கொண்டாடிய இளைஞர் - என்னனு பாருங்க

மனைவி வெறிச்செயல்

இந்நிலையில், இறந்த ரஹ்மானின் சகோதரர் ரஹிமா காணாமல் போனது குறித்து போலீஸிடம் புகாரளித்துள்ளார். இதற்கிடையில் ரஹிமா காவல் நிலையத்தில் சரணடைந்து, குடும்ப தகராறில் தனது கணவரைக் கொன்றுவிட்டதாக ஒப்புக்கொண்டார்.

வீட்டிற்குள்ளேயே 5 அடி குழி - கணவனை கொன்று புதைத்த மனைவி! | Assam Woman Murder Husband 5 Foot Pit Home

கணவரை இறந்ததை மறைப்பதற்காக ஐந்து அடியில் தனது வீட்டில் குழியை தோண்டி உடலை அதில் புதைத்து மண்ணால் மூடி மறைத்துள்ளார். இதன் அடிப்படையில் அவரை கைது செய்துள்ள போலீஸார், அவரது கணவரின் சிதைந்த உடலை நாங்கள் தோண்டி எடுத்தோம்.

ஒரு பெண் மட்டும் இவ்வளவு பெரிய குழி தோண்டி உடலைக் கொட்டுவது சாத்தியமில்லை. இதில், மேலும் சிலர் ஈடுபட்டிருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். மேலும் சில சந்தேக நபர்களைத் தேடி வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.