உயிரை காப்பாற்றிக்கொள்ள காட்டில் தஞ்சம்..கண்ணீர் விட்டு அரணாக நின்ற யானை!!
கேரளாவின் வயநாட்டில் மீட்கப்படுவார்கள் தங்களின் அனுபவங்களை பகிர்வது கேட்போருக்கு இதயத்தை கனக்க வைக்கிறது.
நிலச்சரிவு
கேரளா மாநிலம் வயநாடு பகுதியில், சூரல்மாலாவில் ஏற்பட்ட நிலச்சரிவு 3 கிராமங்களை இருந்த தடம் தெரியாமல் மறைத்து விட்டது. 4-வது நாளாக தொடர்ந்து மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் சூழலில், தற்போது வரை பலி எண்ணிக்கை 340'ஐ கடந்துள்ளது.
இன்னும் 200 பேரின் நிலை என்பது தெரியாத நிலையில் உள்ளது. இந்த சூழலில் தான் தனது பேத்தியுடன் மீட்கப்பட்ட மூதாட்டி ஒருவர் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
சுஜாதா எனப்படும் அவரும் அவரின் பேத்தியான மிருதுளாவும் நிலச்சரிவின் போது சிக்கி, அவர்களின் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது.
நிலச்சரிவு வரும்..அனைத்தையும் மூழ்கடிக்கும் - ஒரு வருடத்திற்கு முன்பே எழுதிய சூரல்மலா 8-ஆம் வகுப்பு மாணவி
உதவிக்காக அழுத பேத்தியை இறுக்கமாக அணைத்து கொள்ள, இருவரும் அடித்து வரப்பட்ட வெள்ளத்தில் நீந்தியுள்ளார்கள். இருவரும் ஒரு காபி தோட்டத்திற்குள் அடித்து செல்லப்பட்டுள்ளார்கள்.
கண்ணீரில்..
இருவரும் ஒரு பனைமரத்தின் அடியில் தஞ்சம் அடைந்துள்ளார்கள்.பலத்த மழையின் காரணமாக, அவர்களின் குரல் யாருக்கும் வெளியே கேட்கவில்லை. அதே நேரத்தில், அவர்கள் அருகில் 3 காட்டு யானைகள் நின்றுள்ளது. அப்போது சுஜாதா, யானைகளிடம் நாங்கள் மரணத்திலிருந்து தப்பித்து வந்திருக்கிறோம்.
தயவு செய்து எங்களை இருக்க விடுங்கள்..." என முறையிட்டதாக கூறினார். தானும் தனது பேத்தியும் மரத்தடியில் ஓய்வு எடுத்த போது, அந்த யானை அவர்களுக்கு பாதுகாப்பாக நின்றதாக கூறினார் சுஜாதா.
நெகிழிச்சியுடன் இதனை பகிர்ந்த சுஜாதா, தான் முறையிட்ட போது ஒரு யானையின் கண்ணில் தான் கண்ணீரை கண்டதாகவும் கூறினார்.