12 கோடி பரிசு ஜெயிச்சது சந்தோசம்..ஆனா இதை நினச்சா பயமா இருக்கு - லாட்டரி வின்னர் வேதனை!
பம்பர் லாட்டரி பரிசு தொகை வென்ற பாதுகாப்பு ஊழியர் பரிசு தொகை வென்றது பற்றி மனம் திறந்துள்ளார்.
விஷூ பம்பர் லாட்டரி
கேரளா அரசு மலையாள புத்தாண்டை முன்னிட்டு விஷூ பம்பர் லாட்டரியை அறிமுகப்படுத்தியது. இதற்கு முதல் பரிசு 12 கோடியாக அறிவிக்கப்பட்டது. இதற்கான குலுக்கல் கடந்த 29ம் தேதி நடைபெற்றது. இதில் ஆலப்புழாவை சேர்ந்த பாதுகாப்பு ஊழியர் விஸ்வாம்பரன் என்பவர் முதல் பரிசான 12 கோடியை வென்றார்.
இந்நிலையில் தான் பரிசு வென்றது குறித்து பேசிய இவர், தனக்கு ஏற்கனவே லாட்டரி வாங்கும் பழக்கம் உண்டு. ஸ்கூலுக்கு, கோவிலுக்கு போகும் போது நான் ஏற்கனவே லாட்டரி வாங்கிய, லாட்டரி ஏஜென்ட் ஜெயா லாட்டரி வாங்குமாறு வலியுறுத்துவார். அவ்வப்போது 1000, 2000 என பரிசுகள் விழும்,.
ஆனால் இவ்வளவு பெரிய தொகை வென்றது இதுவே முதல் முறை. முதல் பரிசு விழுந்ததை சீட்டில் உள்ள எண்னை வைத்து சரிபார்த்து உறுதிபடுத்திக்கொண்ட பின் வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்தேன். அன்று இரவு தான் நிம்மதியாக தூங்கினேன், இதுவரை வாழ்நாளில் அதுபோல் தூங்கியதே இல்லை.
பயமாக உள்ளது
மறுநாள் காலை தான் லாட்டரி டிக்கெட்டை சமர்ப்பித்து பரிசு பெரும் பணிகளை தொடங்கினேன். 12 கோடி ரூபாய் பரிசு வென்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, இந்த பணத்தை எப்படி செலவு செய்வது என இன்னும் முடிவு செய்யவில்லை என கூறியுள்ளார்.
மேலும், நான் லாட்டரியில் பரிசு வென்றது தெரிந்து யாரெல்லாம் வீட்டிற்கு வந்து கடன் கேட்டு தொல்லை செய்ய போகிறார்கள், வீட்டில் உள்ளவர்களையும் தூங்க விடாமல் செய்ய போகிறார்கள் என்பதை நினைத்து பயம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.