ஏர் ஹோஸ்டஸாக பறக்கும் பழங்குடியின பெண் - கனவு நனவானது!
பழங்குடியின பெண் ஒருவர் முதல் முதலாக ஏர் ஹோஸ்டஸாக பணிக்கு சேர்ந்துள்ளார்.
பழங்குடியின பெண்
கேரளா, பழங்குடியின பெண் கோபிகா கோவிந்த். கரிம்பாலா பழங்குடி இனத்தில் பிறந்த இவருக்கு, தனது 12ஆவது வயதில் விமானத்தில் பணிபுரிய வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது.
தனது பள்ளிப்படிப்பை முடித்ததும் இந்த ஆசையை நிறைவேற்ற தகவல்களை சேகரிக்க தொடங்கியுள்ளார். ஆனால், அதற்கு பெரும் செலவாகும் என்பதை அறிந்து என்னசெய்வதென்று தெரியாமல் இருந்துள்ளார்.
12வயது கனவு
இந்நிலையில், கேரளா அரசின் பழங்குடி இன மாணவர்கள் கல்வி திட்டம் தெரியவந்துள்ளது. இந்த திட்டத்தின் பயனாளராகத் தன்னை சேர்த்துக்கொண்ட கோபிகா, கண்ணூரில் எம்எஸ்சி வேதியியல் படித்துக் கொண்டே,
வயநாட்டில் உள்ள ட்ரீம் ஸ்கை ஏவியேஷன் பள்ளியில் விமான பணிப்பெண்ணிற்குப் பயிற்சி பெற்றுள்ளார். இவரின் கல்விச் செலவான ரூ.1 லட்சத்தை அரசு ஏற்றுக்கொண்ட நிலையில், பயிற்சியை வெற்றிகரமாக முடித்து காட்டி
ஏர் ஹோஸ்டஸாக..
தற்போது கேரளாவின் முதல் பழங்குடியின ஏர் ஹோஸ்டஸ் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவரின் இந்த வெற்றிக்கு அரசின் உதவிக்கரமும், பயிற்சி பள்ளி ஆசிரியர்களின் உதவியுமே காரணம் என கூறுகிறார் கோபிகா.
இவரது இந்த சாதனைக்கு சமூக வலைதளங்களில் பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.