கோழிக்கறி தான் பிரசாதம்!! வினோத பழக்கத்தை கொண்ட அம்மன் கோவில் தெரியுமா?
இந்துக்களின் புனித தளங்களில் எப்போதும் சைவ உணவுகளே பிரசாதமாக வழங்கப்படுகிறது. அதுவே வழக்கத்தில் இருந்து வரும் நிலையில், கேரளா மாநிலத்தை சேர்ந்த கோவில் ஒன்றில் பிரசாதமாக சிக்கன் வழங்கப்படுகிறது.
கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் பாயனுர் பகுதிக்கு அருகில் மடாயி காவு என்ற பிரபல ஸ்ரீ திருவருக்காட்டு காவு பகவதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.
இக்கோவிலில் தான் பிரசாதமாக சிக்கன் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. மலபார் தேவசம் போர்ட் தலைமைக்கு கீழ் வரும் இக்கோவில் பழமையான கோவில்களில் ஒன்றாகும்.
இக்கோவிலின் பூசாரிகளுக்கு வங்காளத்தை சேர்ந்த பிராமின்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. அப்படி தான் இந்த சிக்கன் பிரசாதமான வழக்கம் வந்துள்ளது என்றும் கூறப்படுகிறது. பச்சை பட்டாணியுடன் சேர்த்து சிக்கனை சமைத்து பிரசாதமாக வாழையிலையில் வழங்குகிறார்கள்.
இக்கோவில், பாஜக தரப்பில் கண்டனம் பெற்ற போது, தேசிய அளவில் பேசும் பொருளாக மாறியது. அப்போது இக்கோவிலில் பாஜகவின் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா வந்து வழிபட்டு சென்றதாகவும் தகவல்கள் உள்ளது.