எதே.. வாத்து முட்டையில் ஐஸ்கிரீமா? படுவைரலாகும் வீடியோ!
வாத்து முட்டையில் ஐஸ்கிரீம் செய்துள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
வாத்து முட்டை ஐஸ்க்ரீம்
சிங்கப்பூரைச் சேர்ந்த பிரபல உணவுப் பதிவர் கால்வின் லீ என்பவரால் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இவர் புதுவிதமான உணவுகளை சோதித்துப் பார்ப்பதில் பிரபலமானவர்.
அந்த வீடியோவில், தட்டு ஒன்றில் மூன்று ஐஸ்க்ரீம் உருண்டைகள் உள்ளது. அதன்மேல் பாதியாக வெட்டிய அவித்த வாத்து முட்டையை வைக்கிறார்கள்.
வைரல் வீடியோ
பின்னர் அதில் கொஞ்சமாக உப்பு சேர்த்து, அதன்மேல் பொடி போல் ஏதோவொன்றை மேலே தூவுகிறார்கள். கடைசியில் இவை எல்லாவற்றையும் நன்றாக கலக்குகிறார்கள். வாத்து முட்டை ஐஸ்கிரீம் ரெடி. தொடர்ந்து அதை சாப்பிட்ட லீ, என்னவொரு அருமையான, சுவையான, இனிப்பான உப்பு சுவை நிறைந்த ஐஸ்கிரீமை சாப்பிட்டேன் தெரியுமா?
இதை எல்லாரும் தங்கள் வீட்டில் செய்து பார்க்க வேண்டும். இந்த ஐஸ்கிரீமின் சுவை முட்டை மாயோ போல் உள்ளது. அதைவிட நன்றாகவும் உள்ளது எனத் தெரிவிக்கிறார்.
இவ்வாறான காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இதற்கு பலர் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ படுவைரலாகி வருகிறது.