ஐஸ்கிரீம் வாங்க வந்த ஜோமோட்டோ ஊழியரை நெஞ்சில் எட்டி உதைத்த கடை உரிமையாளர் - வைரலாகும் வீடியோ
Coimbatore
Viral Video
Tamil Nadu Police
By Thahir
ஐஸ்கிரீம் வாங்க வந்த ஜோமோட்டோ ஊழியரை நெஞ்சில் எட்டி உதைத்த கடை உரிமையாளரின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஊழியர் மீது தாக்குதல்
கோவை சாய்பாவா காலனியை சேர்ந்தவர் ஸ்டீபன் இவர் அங்குள்ள கல்லுாரியில் படித்துக் கொண்டே உணவு டெலிவரி நிறுவனமான ஜோமோட்டோவில் பகுதி நேர ஊழியராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 1ம் தேதி வாடிக்கையாளர் ஒருவர் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்துள்ளார். இதனை வாங்குவதற்காக ஸ்டீபன் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஐஸ்கிரீம் கடைக்கு சென்ற போது கடை உரிமையாளர் அவரை தரக்குறைவாக பேசியுள்ளார்.
மேலும் அந்த ஊழியரை கடுமையாக பேசிய கடை உரிமையாளர் ஊழியரின் நெஞ்சில் எட்டி உதைத்துள்ளார். தற்போது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.