பூஜையின் மகிமை...கோவில் பூசாரி அடித்த 70 லட்ச லாட்டரி!! தலைசுற்றவைக்கும் கடைசி ட்விஸ்ட்!
லாட்டரி
லாட்டரிகள் தமிழகத்தில் தடை செய்யப்பட்டுவிட்டன. அவை மக்களுக்கு உழைப்பு மீதாக இருக்கும் நம்பிக்கையை குறைகிறது என்ற காரணத்தாலும், பலர் தங்களது பணத்தை லாட்டரி மூலம் முழுவதுமாக இழந்துள்ளார்கள் என்பதால் தமிழகத்தில் தடை நீடிக்கிறது.
ஆனால், அண்டைமாநிலமான கேரளாவில் லாட்டரி என்பது சாதாரணமான விஷயமே. லாட்டரி சீட்டுகளை வாங்குவதை வழக்கமாகவே பலரும் கொண்டுள்ளார்கள். அதில் வெற்றி பெற்று லட்சம் - கோடிகளை வென்றவர்களையும் படித்துள்ளோம். அப்படி தான் கேரளாவில் கோவில் பூசாரி ஒருவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
1 கோடி
இடுக்கி மாவட்டம் மேப்பாறை பகுதியில் ஸ்ரீ மகாவிஷ்ணு கோவிலில் பூசாரியாக இருப்பவர் மதுசூதனன். இவருக்கு ஆதிரா என்பவருடன் திருமணமாகி, வைஷ்ணவ் மற்றும் வைகலட்சுமி என்ற 2 பெண் பிள்ளைகளும் உள்ளார்கள்.
லாட்டரி சீட்டு வாங்குவதை வழக்கமாகவே கொண்டவராக இருக்கிறார் மதுசூதனன். இவருக்கு அண்மையில் வாங்கிய லாட்டரி ஒன்றில் 1 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. இந்த செய்தி காட்டு தீ போல பரவி வருகிறது.
முன்னதாக 5 ஆண்டுகளுக்கு முன்பு, இவருக்கு ஒரு இலக்க வித்தியாசத்தில் ரூ.70 லட்சம் கைவிட்டு போனதாகவும் கூறப்படுகிறது. மதுசூதனின் தெய்வீக பணிகளின் பலனாகவே அவருக்கு இந்த பரிசு தொகை விழுந்துள்ளதாகவும் ஊர் மக்கள் பேச துவங்கி விட்டார்கள்.