காலையில் வாங்கிய லாட்டரி - மாலையில் தேடிவந்த ஜாக்பாட் - திக்குமுக்காடிய சேட்டன்..!
கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு காலையில் வாங்கிய லாட்டரிக்கு மாலையே ஜாக்பாட் அடித்த சுவாரசிய சம்பவம் நடைபெற்றுள்ளது.
லாட்டரி
பலருக்கும் சட்டென லாட்டரியில் பல கோடி மதிப்பில் பணம் விழுந்து ஒரே நாளில் அவர்களது வாழ்க்கையே மாறிய சம்பவங்களை நாம் நிறையவே படித்துள்ளோம்.
அப்படி ஒரு சம்பவம் தான் கேரளா மாநிலம் மூணாறில் நடைபெற்று சேட்டன் ஒருவரை திக்குமுக்காடவைத்துள்ளது. மூணாறு அருகே குண்டளை எஸ்டேட் புதுக்குடி டிவிஷனைச் சேர்ந்தவர் 45 வயதான பரமசிவன்.
தாங்கும் விடுதி நடத்தி வரும் பரமசிவன், பழனி மலைக்கு மலையிட்டு நேற்று முன்தினம் காலை பழனியில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.
இன்ப அதிர்ச்சி
மகன்களுடன் கோவிலுக்கு செல்லும் வழியில் அவர் மூணாறில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பெரியவாரை பகுதியில் ஆசுவாசம் பெற தேனீர் அருந்தியவர் அப்போது அங்கு லாட்டரி விற்றவரிடம் கேரள அரசின் பிப்டி, பிப்டி லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார்.
சீட்டை வாங்கியவுடன் தனது பயணத்தை தொடர்ந்தவருக்கு மாலையில் தான் இன்ப அதிர்ச்சி செய்தி கிடைத்துள்ளது. அதாவது காலையில் வாங்கிய லாட்டரியில் அவருக்கு மாலை 1 கோடி பரிசு தொகை விழுந்துள்ளது.