திருநங்கை ஜோடிக்கு கோவிலில் திருமணம் செய்ய அனுமதி மறுப்பு!
திருநங்கை ஜோடிகளுக்கு கோவிலில் திருமணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
திருநங்கை ஜோடி
திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் நீலம் கிருஷ்ணா(31). இவர் பெண்ணாக பிறந்து அறுவை சிகிச்சை செய்து திருநம்பியாக மாறியவர். அதேப் பகுதியைச் சேர்ந்தவர் ஆத்மிகா(25) இவர் ஆணாக பிறந்து விருப்பப்பட்டு அறுவை சிகிச்சை செய்து திருநங்கையாக மாறியவர்.
இவர்கள் இருவரும் கொல்லங்கோடு நகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகின்றனர். அப்போது இருவரும் பழகியுள்ளனர். அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. தொடர்ந்து இவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
அனுமதி மறுப்பு
அதனால், காலாங்குறிச்சி பகவதி அம்மன் கோவிலில் திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக நிர்வாகத்திடம் முன் அனுமதியும் வாங்கியிருந்தனர். ஆனால் திடீரென அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அதனையடுத்து கோவில் அருகில் ஒரு மண்டபத்தை ஏற்பாடு செய்து நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துள்ளனர். தற்போது கோவிலில் திருமணம் நடத்த அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.