16 வயது மாணவியின் உயிரை காவு வாங்கிய பரோட்டா - என்ன நடந்தது!
பரோட்டா சாப்பிட்டதால் 16 வயது மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி பலி
கேரளா, இடிக்கி மாவட்டத்தில் உள்ள வாழத்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சிஜூ கேப்ரியல். இவரது மகள் நயன்மரியா(16). இவர் அங்குள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், பரோட்டா சாப்பிட்டதால் ஏற்பட்ட ஒவ்வாம்மை காரணமாக அரசு மருத்துவமனை கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், நயன்மரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு மைதா மற்றும் கோதுமையினால் செய்யப்பட்ட உணவுகளில் ஒவ்வாமை இருந்துள்ளது. இதனால், அவர் அதற்கென்று சிகிச்சை பெற்றுள்ளார். தனக்கு ஓரளவு அந்த பிரச்னை நீங்கிவிட்டதாக எண்ணி, அவர் பரோட்டா சாப்பிட்டுள்ளார்.
ஒவ்வாமை
ஆனால் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் வென்டிலேட்டர் சிகிச்சையில் இருந்த அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
கோதுமை ஒவ்வாமை முதிர்ச்சியடையாத நோயெதிர்ப்பு மற்றும் செரிமான அமைப்புகளைக் கொண்ட குழந்தைகள், சிறுவர்களுக்கு மிகவும் பொதுவானது. பெரும்பாலான குழந்தைகள் 16 வயதிற்குள் கோதுமை ஒவ்வாமையை விட்டு வந்துவிட முடியும்.
உணவு ஒவ்வாமை அல்லது ஆஸ்துமா போன்ற பிற ஒவ்வாமைகள் இருந்தால், கோதுமை அல்லது பிற உணவுகளுக்கு ஒவ்வாமை ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. இதற்கு மருத்துவ ஆலேசனை பெறுவது சிறந்தது.