டீ, பரோட்டா போட்டு வாக்கு சேகரிக்கும் தலைவர்கள் - சுவாரஸ்ய அட்ராசிட்டிஸ்

Indian National Congress Tamil nadu AIADMK
By Sumathi Feb 10, 2023 08:26 AM GMT
Report

டீ, பரோட்டா போட்டு கொடுப்பது என அரசியல் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளர் தென்னரசு களமிறங்கியுள்ளார். அவருக்கு ஆதரவாக அதிமுகவின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் பலரும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதேபோல் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் களமிறங்கியுள்ளார்.

டீ, பரோட்டா போட்டு வாக்கு சேகரிக்கும் தலைவர்கள் - சுவாரஸ்ய அட்ராசிட்டிஸ் | Parotta Tea Ironed Leaders Gathering Votes

அவருக்கு ஆதரவாக திமுக அமைச்சர்களும் கூட்டணி கட்சி தலைவர்களும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். பிப்ரவரி 27 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், ஈரோடு முனிசிபல் காலனி பகுதியில் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

 தீவிர பிரச்சாரம்

அவர் பிரச்சாரத்தின் போது அப்பகுதியில் இருந்த உணவகத்திற்கு சென்று புரோட்டா போட்டு கொடுத்து இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்களிக்கும் படி கேட்டுக் கொண்டார். தொடர்ந்து, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஒரு டீக்கடையில் புகுந்து அனைவருக்கும் டீ போட்டுக் கொடுத்து வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

டீ, பரோட்டா போட்டு வாக்கு சேகரிக்கும் தலைவர்கள் - சுவாரஸ்ய அட்ராசிட்டிஸ் | Parotta Tea Ironed Leaders Gathering Votes

அதோடு விடாதவர் சலவைக் கடையில் புகுந்து துணிகளை அயர்ன் செய்து கொடுத்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதுகுறித்த வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.