தலைமுடியை முன்னாள் போட்டு மறைத்து கொண்டோம்... நீட் தேர்வு எழுதிய மாணவி அளித்த பகீர் தகவல்!

Kerala NEET
By Sumathi Jul 20, 2022 12:16 PM GMT
Report

கேரள மாநிலம், கொல்லத்தில் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவிகள் உலோகக் கொக்கி கொண்ட உள்ளாடைகள் அணிந்திருந்ததாக, அவற்றைக் கழட்டச் சொன்ன விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வு 

உங்கள் எதிர்காலம் பெரிதா அல்லது உள்ளாடைகள் உங்களுக்கு பெரியதா? அதை அகற்றிவிட்டு பரீட்சை எழுந்துங்கள் எங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள் என்று பாதுகாப்பு அதிகாரிகள் கூறி உள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தலைமுடியை முன்னாள் போட்டு மறைத்து கொண்டோம்... நீட் தேர்வு எழுதிய மாணவி அளித்த பகீர் தகவல்! | Kerala Student Describes The Brutality Of Neet

இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள கல்வித்துறை மந்திரி பிந்து, மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உண்மை கண்டறியும் குழுவை மத்திய கல்வித்துறை அமைத்துள்ளது.

 உள்ளாடை விவகாரம்

தேசிய தேர்வு முகமை உயர் அதிகாரிகள் கொண்ட இந்த குழுவினர், கொல்லம் சென்று இது தொடர்பாக விசாரணை நடத்த உள்ளனர். இந்தநிலையில், கொல்லத்தில் நீட் தேர்வு மையத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றிய விவகாரத்தில் 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைமுடியை முன்னாள் போட்டு மறைத்து கொண்டோம்... நீட் தேர்வு எழுதிய மாணவி அளித்த பகீர் தகவல்! | Kerala Student Describes The Brutality Of Neet

3 பேர் தேர்வு முகமை பணியாளர்கள், 2 பேர் கல்லூரி ஊழியர்கள் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. தேர்வு மைய வளாகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் இந்த சம்பவம் நடந்திருப்பது உறுதியாகி உள்ளது.

 ஸ்கேனிங் 

நீட் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு முன் தனது உள்ளாடையை கழற்ற வற்புறுத்தபட்ட 17 வயது மாணவி கூறியதாவது, "என்னை அழைத்து ஸ்கேனிங் இருக்கும் என்று சொன்னார்கள். ஸ்கேன் முடிந்து விடுவார்கள் என்று நினைத்தோம் ஆனால் எங்களை இரண்டு வரிசையில் நிற்க வைத்தார்கள்

 ஒன்று மெட்டல் கொக்கிகள் இல்லாத உள்ளாடை அணிந்த பெண்களுக்கு, மற்றொன்று!" "அவர்கள் என்னிடம் கேட்டார்கள், நீங்கள் மெட்டல் கொக்கி கொண்ட உள்ளாடைகளை அணிந்திருக்கிறீர்களா? நான் ஆம் என்று சொன்னேன், அதனால் அந்த வரிசையில் நிற்கும்படி கூறப்பட்டேன்.

ஏன் அழுகிறாய்?

" என்ன நடக்கிறது, ஏன் நடக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. "எங்கள் உள்ளாடையை கழற்றி ஒரு மேசையில் வைக்கச் சொன்னார்கள். அனைத்து உள்ளாடைகளும் ஒன்றாகக் குவிந்திருந்தன. நாங்கள் திரும்பி வரும்போது எங்களுடையது திரும்பக் கிடைக்குமா என்று கூட எங்களுக்குத் தெரியாது.

நாங்கள் திரும்பி வரும்போது கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கு சண்டையே நடைபெற்றது. ஆனால் என்னுடையது எனக்கு கிடைத்தது. சில பெண்கள் அவமானத்தால் அழுதனர். பெண் பாதுகாப்பு ஊழியர் ஒருவர், "ஏன் அழுகிறாய்?" என்று கேட்டார்.

 பயங்கரமான அனுபவம்

உன் உள்ளாடையை கையில் எடுத்துக்கொண்டு புறப்படு, அணிய வேண்டிய அவசியமில்லை என்றார்கள். அதைக் கேட்டு நாங்கள் மிகவும் வெட்கப்பட்டோம். ஆனால் அனைவரும் மாற்றக் காத்திருந்தனர். இருட்டாக இருந்தது, மாற்றுவதற்கு இடமில்லை ..! இது ஒரு பயங்கரமான அனுபவம்.

நாங்கள் தேர்வு எழுதும் போது சால்வை இல்லாததால் தலைமுடியை முன்னால் போட்டு மறைத்து கொண்டோம்! அங்கு ஆண்களும் பெண்களும் இருந்தனர், அது மிகவும் கடினமாகவும் சங்கடமாகவும் இருந்தது என கூறினார்.