தவறான அறுவை சிகிச்சை - மாணவன் முழங்கை வரை அழுகி வெட்டி எடுத்த கொடுமை!

Kerala Crime
By Sumathi Nov 21, 2022 11:33 AM GMT
Report

தவறான சிகிச்சையால், மானவனில் முழங்கை வரை எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தவறான சிகிச்சை

கேரளா, தலசேரியைச் சேர்ந்தவர் மாணவன் சுல்தான் சித்திக். இவர் நண்பர்களுடன் விளையாடும் போது கையில் அடிபட்டுள்ளது. அதனால் அங்குள்ள அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அப்போது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரிந்துள்ளது.

தவறான அறுவை சிகிச்சை - மாணவன் முழங்கை வரை அழுகி வெட்டி எடுத்த கொடுமை! | Kerala Student Arm Was Cut Off Botched Operation

ஆனால் மாலையில் எலும்பு முறிவு மருத்துவர் மருத்துவமனையில் இல்லை என்பதால் மற்றொரு மருத்துவர் சித்திக்கிக்கு உடைந்த எலும்புகளுக்கு முதலுதவி செய்து கட்டு போட்டுள்ளார். அடுத்த நாள் வந்த எலும்பு மருத்துவர் பிச்சு மோன் பரிந்துரையின் பேரில் அந்த மாணவனுக்கு கையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

பகீர் சம்பவம் 

அதன் பின் இரண்டு வாரங்களுக்கு மாணவன் கையில் கடும் வலி இருந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்த கையில் ரத்த ஓட்டம் நின்று, அழுகிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் அதை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். உடனே மாணவனின் முழங்கை வரை அறுவை சிகிச்சை செய்து நீக்கியுள்ளனர். தவறான சிகிச்சை கொடுத்த தலசேரி மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவனின் பெற்றோர் கேரள முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர், மனித உரிமைகள் ஆணையம் ஆகியோரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.