மாற்று பாலின அறுவை சிகிச்சை - இது மருத்துவ தொழிலின் தவறான நடத்தை!
உறுப்பு மாற்றும் அறுவை சிகிச்சை, மருத்துவ தொழிலின் தவறான நடத்தை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலின அறுவை சிகிச்சை
"மாற்று பாலின சிகிச்சை" என்ற சொல், ஒரு நபரின் பாலியல் விருப்ப நிலையை (Sexual Orientation) மாற்றும் அல்லது ஒரு நபரின் பாலின அடையாளத்தை (Gender Identity) அடக்கும் எந்தவொரு சிகிச்சையையும் அல்லது உளவியல் சிகிச்சையையும் குறிக்கிறது.
மருவிய பாலின மற்றும் தன்பாலின ஈர்ப்பாளர்களின் உரிமை பாதுகாப்பு வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று (செப்.2) விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசிய மருத்துவ ஆணையம் தரப்பில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி
தவறான நடத்தை
மருவிய பாலினத்தவர்களின் சுய பாலின அடையாளத்தை மாற்றும் சிகிச்சை, மருத்துவ தொழிலின் தவறான நடத்தை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முடிவெடுக்க மாநில மருத்துவ கவுன்சில்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை தேசிய மருத்துவ ஆணையத்தின் வரைவு விதிகளில் சேர்ப்பது குறித்து அடுத்த விசாரணையின் போது விளக்கமளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி,
12 வார கால அவகாசம்
தேசிய மருத்துவ ஆணையத்தின் உத்தரவை உடனடியாக அமல்படுத்தி, அதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மாநில மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிட்டார்.
மருவிய பாலினத்தவர்கள் உரிமைகள் பாதுகாப்பு விதிகள் மற்றும் கொள்கைகளை அறிவிக்க 12 வார கால அவகாசம் வழங்கி, விசாரணையை டிசம்பர் 9ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.