பிறந்து 23 நாட்கள் தான் ஆச்சு..பெண் குழந்தைக்கு நடந்த கொடூரம் - பகீர் பின்னணி!
பிறந்து 23 நாட்களே ஆன பெண் குழந்தையை மருத்துவமனையில் விட்டு சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
கேரள மாநிலம்
கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள ஒரு மீன் பண்ணையில் ஜார்க்கண்டைச் சேர்ந்த மங்களேஸ்வர் - ரஞ்சிதா தம்பதியினர் வேலை செய்து வந்த நிலையில், ரஞ்சிதா கர்ப்பம் அடைந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 29ம் தேதி பிரசவத்திற்காகச் சொந்த ஊர் திரும்ப நினைத்த போது பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து மங்களேஸ்வர் எர்ணாகுளம் பொது மருத்துவமனையில் தனது மனைவியை அனுமதித்துள்ளார். அப்போது அவர்களுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், குழந்தையின் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பெண் குழந்தை
குழந்தைக்கு மருத்துவம் பார்க்கக் கையில் பணம் இல்லாததால் பெற்றோர்கள் இருவரும் குழந்தையைப் பிறந்த குழந்தையை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றுள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், மங்களேஸ்வரர் ரஞ்சிதாவை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளனர்.
ஆனால் எந்தவித பதிலும் வரவில்லை . இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே, குழந்தைக்கு இன்னும் ஒருமாத காலம் சிகிச்சை தேவைப்படுவதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.