21 ஆண்டுகளாக இளைஞரின் நுரையீரலில் சிக்கியிருந்த பொருள்.. டாக்டர்கள் அதிர்ச்சி - என்ன தெரியுமா?
இளைஞர் ஒருவரின் நுரையீரலில் 21 ஆண்டுகளாக பேனா மூடி சிக்கியிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா
தெலுங்கானா மாநிலம் கரீம்நகரை சேர்ந்தவர் 26 வயதுடைய இளைஞர். இவருக்குக் கடந்த சில முன் இருமல் மற்றும் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டிலிருந்தே மருத்துகளை எடுத்துக் கொண்டுள்ளார். இதனால் அவரது உடல்நிலை மோசமடைந்தது தூங்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட இளைஞரை ஹைதராபாத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இளைஞருக்கு CT ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது நுரையீரல் பகுதியில் கட்டி போன்ற அமைப்பு இருந்தது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து அறுவை சிகிச்சையின் மூலம் அதனை அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர்.அறுவை சிகிச்சை மேற்கொண்ட போது நுரையீரலில் சிக்கியிருந்தது பேனா மூடி என்பது தெரிய வந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் ப்ரோன்கோஸ்கோபியைப் பயன்படுத்தி அதனை அகற்றினர்.
பேனா மூடி
கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து இளைஞரின் குடும்பத்தினரிடம் கேட்டபோது,’’அவர் தனது ஐந்து வயதில், ஒரு பேனா மூடியை விழுங்கி விட்டார்.அப்போது, அவரை ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்றோம்.
அப்படி எதுவும் இல்லை என்று கூறினார். இதனால் எந்த பாதிப்பும் இல்லாததால் நாங்கள் சிகிச்சை அளிக்கவில்லை’’எனத் தெரிவித்தனர். சுமார் 21 ஆண்டுகளாக நுரையீரலில் பேனா மூடியுடன் வாழ்ந்த வாலிபர் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

நகரப்போகும் 2025 இல் ஏற்படபோகும் பேரழிவு : பீதியை கிளப்பும் பாபா வாங்காவின் திடுக்கிடும் கணிப்புக்கள் IBC Tamil
