ஹனிமூன் சென்று திரும்பிய போது நேர்ந்த சோகம் - புதுமண தம்பதி உட்பட 4 பேர் பலி
வேன் கார் மோதிய விபத்தில் புதுமண தம்பதி உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுமண தம்பதி
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த நிகில் மற்றும் அணுவிற்கு கடந்த நவம்பர் 30ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த தம்பதி மலேசியாவிற்கு ஹனிமூன் சென்று விட்டு இன்று திருவனந்தபுரம் திரும்பியுள்ளனர். தம்பதிகளை திருவனந்தபுர விமான நிலையத்தில் இருந்து அழைத்து வர நிகிலின் தந்தை மேத்யூ ஈப்பன் மற்றும் அணுவின் தந்தை பிஜு பி ஜார்ஜ் ஆகியோர் காரில் சென்றுள்ளனர்.
கார் விபத்து
இந்நிலையில் அதிகாலை 4.15 மணியளவில் புனலூர்-மூவாட்டுபுழா மாநில நெடுஞ்சாலையில் இவர்கள் 4 பேரும் பயணித்து வந்த கார் மீது எதிரே வந்த வேன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் சம்பவ இடத்திலே 4 பெரும் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர்.
தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வேனில் தெலுங்கானாவை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் பயணித்துள்ளனர். வேன் டிரைவர் சற்று தூங்கியதே இந்த விபத்துக்கு காரணம் என சொல்லப்படுகிறது. இதில் வேன் ஓட்டுநர் மற்றும் பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.