மனைவி உடன் விவாகரத்து - 32 பேரை கார் ஏற்றி கொன்ற முதியவர்
32 பேரை முதியவர் கார் ஏற்றி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாறுமாறாக ஓடிய கார்
சீனாவின் சுஹாய் மாகாணத்தில் உள்ள ஸூஹைய் விளையாட்டு மைதானத்தில் மாலை பொழுதுகளில் மக்கள் நடைபயிற்சி செய்வது, உடற்பயிற்சி செய்வது வழக்கம்.

இந்நிலையில் நேற்று (11.11.2024) இரவு இரவு 8 மணியளவில் SUV வகை கார் ஒன்று தாறுமாறாக ஓடி அங்கு இருந்தவர்கள் மீது மோதியுள்ளது.
35 பேர் பலி
இந்த சம்பவத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். 45 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தையடுத்து அந்த விளையாட்டு மைதானம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்த வாகனத்தை ஓட்டி வந்த பேன் என்கிற 62 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில், மனைவி உடனான விவாகரத்தின் போது சொத்துக்களை எவ்வாறு பிரிப்பது என்பதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இவ்வாறு செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஓடுபாதையில் உடற்பயிற்சிக்கான உடைகளுடன் பலரும் உயிரிழந்து கிடக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எங்களை கொன்று புதைத்தவர்களிடம் நீதியை கேட்பதில் எந்த அர்த்தமும் இல்லை : கந்தையா பாஸ்கரன் ஆணித்தரம் IBC Tamil
சர்ச்சைகளுக்கு நடுவில் விஜய் - த்ரிஷா ஜோடியாக அஜித்தின் கார் பந்தயத்தில் : வைரலாகும் புகைப்படங்கள் Manithan
தீவிர அச்சத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இலக்கு வைக்கப்பட்ட ஜோசப் பரராஜசிங்கம்! தேவாலயத்துக்குள் நடந்த துப்பாக்கிச்சூடு IBC Tamil