மாநிலத்தின் பெயரை மாற்றும் கேரளா - சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
கேரளா மாநிலத்தின் பெயரை மாற்றுவதற்கான தீர்மானத்தை அம்மாநில சட்டப்பேரவையில் மாநில முதல்வர் பினராயி விஜயன் தாக்கல் செய்தார்.
கேரளா
1956ம் ஆண்டு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது கேரளா உருவானது. மலையாளத்தில் இம்மாநிலத்திற்கு 'கேரளம்' என்று பெயர். ஆனால் கேரளா என்று தான் பொதுவாக அழைக்கப்படுகிறது.
மேலும், அரசியலமைப்பின் முதல் அட்டவணையிலும் கேரளா என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இதனை 'கேரளம்' என்று மாற்ற வேண்டும் என நீண்ட நாட்களாக அம்மாநில மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
கேரளம்
இந்நிலையில், நேற்று கூடிய கேரள சட்டமன்றத்தில் இன்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என்று மாற்ற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர் பினராயி விஜயன் தீர்மானம் கொண்டுவந்தார்.
இதற்கு அணைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. ஏற்கனவே கடந்த ஆண்டு இது தொடர்பாக மத்திய அரசுக்கு தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்த தீர்மானத்தில் சில குறைகள் இருப்பதாக கூறிய மத்திய அரசு அதனை திருப்பி அனுப்பிவிட்டது.
தற்போது அந்த குறைகளை திருத்தி மீண்டும் அனுப்பி வைத்துள்ளது.
மத்திய அரசு இந்தத்தீர்மானத்தை ஏற்கும் பட்சத்தில் கேரளா மாநிலத்தின் பெயர் கேரளம் என மாறும்.