பிரம்மிக்க வைக்கும் மீன்குளத்தி பகவதி அம்மன் ஸ்தல வரலாறு!
மீன்கள் அதிகமாகத் துள்ளி விளையாடும் குளத்தின் அருகே தோன்றியதால் மீன்குளத்தி பகவதி அம்மன் என்று பெயர் பெற்றது.
ஸ்தல வரலாறு
புகழ்பெற்ற மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலின் வரலாறு குறித்தும் சிறப்புகள், வழிபாட்டு முறைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கேரள மாநிலம், பாலக்காட்டிலிருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ளது பல்லசேனா கிராமத்தில் மீன் குளத்தி பகவதி அம்மன் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் அமைந்துள்ளது.
இந்தக் கோயிலை, ஸ்ரீபழைய காவில் பகவதி கோயில் என்றும் அழைக்கின்றனர்.மேலும் சிறப்பு என்னவென்றால் மதுரை மீனாட்சி அம்மனே இங்கு மீன் குளத்தில் பகவதி அம்மனாக காட்சியளிப்பதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.கோயம்புத்தூரிலிருந்து சுமார் 78 கி.மீ. தொலைவில் உள்ளது.
குறிப்பாக இந்த கோவிலில் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், மற்றும் அஷ்ட ஐஸ்வரியங்களும் கிடைக்க ஸ்ரீமீன்குளத்தி பகவதி அம்மன் அருள்பாலிக்கிறாள் . மேலும் தீராத நோயால் அவதிப்படுவோர், இந்தத் தீர்த்தக் குளத்தில் நீராடினால், விரைவில் குணம் அடைவார்கள் என்பது ஐதீகம் .
30 வருஷத்திற்குப் பின்.. நவராத்திரியால் வரும் அதிர்ஷ்டம் - இந்த ராசிக்கெல்லாம் பண மழை கொட்டப்போகுது!
சோழ தேசத்துக் குடும்பத்தாருக்கு அடைக்கலம் தந்து வியாபாரத்தையும் செழிக்கச் செய்தவள். எனவே இங்கு வந்து பிரார்த்தித்தால், வியாபாரம் சிறக்கும் என்பது நம்பிக்கை'' என்று நம்பிக்கை அளிப்பதாகக் கூறப்படுகிறது.
நடை திறக்கும் நேரம்
இந்த கோவில் ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை 5.30 மணிக்குக் கோயில் நடை திறக்கப்பட்டு, மதியம் 12.30 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.
மற்ற நாட்களில், அதிகாலை 5 மணிக்குத் திறக்கப்பட்டு, காலை 10.30 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.மற்றபடி, எல்லா நாட்களிலும் மாலை 5.30 மணிக்குத் திறந்து இரவு 7.30 மணிக்கு நடைசாத்துவது வழக்கம்.
சிறப்பு அம்சங்கள் : மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி, திருக்கார்த்திகை, மண்டல விளக்குத் திருவிழா, பள்ளி சேட்டை, பைரவர் திருவிழா என்று பல விழாக்கள் இருப்பினும் 8 நாள் திருவிழாவாகக் கொண்டாடப்படும் மாசித் திருவிழா மிக விமரிசையாக நடைபெறுகிறது.
இங்கு ஒட்டன் துள்ளல், கதகளி போன்றவை மாசித் திருவிழாவின் சிறப்பு அம்சங்களாகக் கொண்டுள்ளது.