ஓடும் பஸ்ஸில் ஆபாசம் காட்டிய இளைஞர்; அலறிய இளம் நடிகை - பகீர் சம்பவம்
நடிகையிடம் இளைஞர் ஒருவர் அந்தரங்க உறுப்பை காட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஸ்ஸில் கொடூரம்
கேரளாவை சேர்ந்த நடிகை ஒருவர் திருச்சூரிலிருந்து எர்ணாகுளத்திற்கு படப்பிடிப்பதற்காக பேருந்தில் சென்றுள்ளார். அப்போது பேருந்தில் ஏறிய இளைஞர் ஒருவர் அவரிடம் பேச்சு கொடுத்து கொண்டிருந்தபோது திடீரென தனது அந்தரங்க உறுப்பை காட்டியுள்ளார்.
உடனே அதிர்ச்சியடைந்த நடிகை தனது ஃபோனில் வீடியோ எடுத்து அந்த இளைஞனிடம் சரமாரியாக கேள்வி கேட்டுள்ளார். அதனால் இளைஞர் பேருந்தில் இருந்து தப்பி ஓட முயன்றுள்ளார்.
பகீர் சம்பவம்
ஆனால், பேருந்தில் இருந்த சக பயணிகள் அந்த இளைஞரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். உடனே வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.
தொடர்ந்து ந்த சம்பவத்தில் தனக்கு உதவிய பேருந்து ஓட்டுநர் நடத்துனர் மற்றும் சக பயணிகளுக்கு நன்றி தெரிவித்து அந்த நடிகை தனது சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.