தன்பாலின காதல்.. ஆத்திரத்தில் அந்தரங்க உறுப்பை வெட்டிய காதலன்!
தன்பாலின் ஈர்ப்பாளர் ஒருவர் அவரது காதலனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தன்பாலின காதல்
உத்தரபிரதேசம், பரேலி மாவட்டத்தில், 32 வயதான இளைஞர் ஒருவரும், 30 வயதான இளைஞரும் கடந்த ஓராண்டு காலமாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இவர்கள் சில நாட்களுக்கு முன், பரேலி சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது, இருவரும் தனியாக இருந்ததை, இளைஞர் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார்.
அந்தரங்க வீடியோ
மேலும், அந்த வீடியோவை வைத்து காதலனை பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பணம் தரவில்லை என்றால் சமூக வலைதளத்தில் அதை பதிவேற்றிவிடுவதாகவும் பயமுறுத்தியுள்ளார். இந்நிலையில், இருவரும் அண்மையில் ஹோட்டல் ஒன்றில் சந்தித்தபோது,
அந்த வீடியோவை அழிக்கும்படி பாதிக்கப்பட்ட இளைஞர், மற்றொருவரிடம் கேட்டுள்ளார். ஆனால், அந்த வீடியோவை அழிக்க அவர் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது,
தாக்குதல்
பாதிக்கப்பட்ட இளைஞர் அங்கிருந்த கூர்மையான பொருளை வைத்து காதலனின் ஆணுறுப்பை வெட்டியுள்ளார். அதனைத் தொடர்ந்து, மேற்சிகிச்சைக்காக ஆணுறுப்பு வெட்டப்பட்ட நபர் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுவருவதாகவும், மற்றொரு நபர் நலமாக உள்ளதாகவும் அரசு மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாக போலீஸார் தெரிவிக்கையில், "இந்த விவகாரம் தொடர்பாக எவ்வித எழுத்துப்பூர்வமான புகாரும் இதுவரை வரவில்லை. தற்போது, சம்பவம் நடத்த ஹோட்டலின் சிசிடிவி கேமாரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம். அதன் பின்னர், விசாரணை நடத்தப்பட்ட விரைவில் வழக்குப்பதிவு செய்யப்படும்" என்றனர்.